Wednesday, June 30, 2010

ஈழ தமிழ் மாணவர்கள் - கரூர் முகாம்

கரூர் ல்  உள்ள ஈழ தமிழ் மாணவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

உதவி செய்யவும்.


1 S.No Name Education Collage / School name Fathers name Fathers occupation Total fees Offer N.G.O Fees amount req Details Funders
2 1 L.Kavitha cruz Ist Year B.E(E.E.E) Kumaraswamy Engg collage - Karur j.Lawrence cruz Painter (Coolie) 72,500 9,500 42,500 -9790457621  
2 L.Dickson cruz 11th Std Bharani park metric school- Karur j.Lawrence cruz Painter (Coolie) 20,000 500 10,000 429 marks in 10th  
3 K.Ramesh kumar 3rd year (Catering) Valluvar collage - Karur Died N.A 60,000 6,000 30,000 9655642044  
4 K.Yoganeshwari Ist Year Fashion designing Valluvar collage - Karur Died N.A 20,000 6,000 7,500 9655642044  
5 S.Anusiya Ist year Bsc Micro bio Sharadha nikedhan Womens collage - Karur Palani Coolie 12,000 6,000 5,000    
6 Sangeetha 1st Year B.Sc (C.S) Valluvar collage - Karur Died N.A 9,000 6,000 3,000    
7 M.Janarthiga Ist year Bsc Micro bio Sharadha nikedhan Womens collage - Karur Mahendran Coolie 12,000 6,000 5,000    
8 Ushanth Rejinan 2nd Year B.Com Valluvar collage - Karur Manikka vasagam Coolie 14,000 4,000 6,000    
10  9 Sivadas 3rd Year Bsc (Chemistry) St.Joseph Collage - Trichy (Hostel) Devaraj Not working (Accident) 20,000 0 10,000    
11  10 R.Rajeshwari Ist Year Fashion designing Valluvar collage - Karur Rajalingam Coolie 20,000 6,000 7,500    
12  11 S.Gopinath Ist Year B.Com Kongu arts & science Collage - Karur Sunil Coolie 16,000 4,000 6,000    
13  12 R.Sasi Rubi 2nd Year B.Com Sharadha nikedhan Womens collage - Karur Rathnakumar Painter (Coolie) 8,000 4,000 4,000    
14  13 R.Rajkumar Ist Year D.E.E.E P.G.P Polytechnic - Namakkal Rathnakumar Painter (Coolie) 25,000 4,000 10,000 Attempt  
15  14 G.Kanaga Vaani Ist Year B.Com Sharadha nikedhan Womens collage - Karur S.Ganesalingam Not working (not well) 8,000 4,000 2,000    
16  15 S.Aravith 3rd Year B.Com Valluvar collage - Karur Suppaiya Tailor (Coolie) 14,000 4,000 6,000    
17  16 Revathi 2nd Year Kongu arts & science Collage - Karur Selvanayagam Coolie 15,000 4,000 5,000    
18  17 Sagaya Marry 3rd Year Bsc (C.S) P.G.P Arts & Science collage - Namakkal Kalimuthu Daily wage worker 16,000 6,000 6,000    
19  18 Yogalakshmi 2nd Year B.Com Kongu arts & science Collage - Karur   Tailor (Coolie) 14,000 4,000 5,000    
20  19 Gopi 11th Std Bharani park metric school- Karur Karnan Not living with family 20,000 500 7,500 451 marks in 10th  
21  20 P.Sangeeta 3rd Year B.A.Eng Sharadha nikedhan Womens collage - Karur Palani Coolie 10,000 4,000 5,000    


தொடர்புக்கு:

Prabu: +91 9902873799
Nattramilan: +91 9886002570

Friday, June 18, 2010

நினைவலைகள் - சிறுகதை - குட்டி

சென்னையில் நடந்த இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு அப்பா பொன்னுசாமியுடன் வந்த முருகனுக்கு எல்லாமே அதிசயமாய் தெரிந்தது. பொன்னுசாமி அணிந்திருந்த ஒரு பழைய வெள்ளை சட்டையும், பழுப்பு வேஷ்டியும், காடு மேடுகளை சுற்றிப்பார்த்த பகுதி தேய்ந்த அந்த இரப்பர் செருப்பும் முருகனை வெட்கபட வைத்திருக்க வேண்டும். முருகன் அப்பாவிடமிருந்து விலகி நடந்தது மற்றும் அவன் நடந்து கொண்ட விதம் அதைக் காட்டிக்கொடுத்தது.
பொன்னுசாமி ஒரு விவசாய கூலி.அவருடைய அந்த வெள்ளைசட்டையையும், வேஷ்டியையும் முக்கிய விசேஷங்களுக்கு முட்டும் உடுத்தியிருப்பார், இப்போது மகனது கவுன்சிலிங்குக்காக.
கவுன்சிலிங் அறை முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்தது, அங்கே மேலும் சில வெள்ளை வேஷ்டிகள் ஆனால் அவை எல்லாமே விலையுயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். பெரும்பாலான மற்ற மாணவர்கள் புது பேண்ட், சர்ட் சகிதத்தில் நுனிநாக்கு ஆங்கிலம். ஆனால் முருகனோ அவனது காலின் கீழ்பகுதியை காட்டும் உயரம் பத்தாத பேண்ட், இரப்பர் செருப்பு மற்றும் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் தைக்கப்பட்ட வெளுத்துப்போன கலர் சட்டையுடன் மைக்கில் சொல்லும் ஆங்கிலத்தை அரைகுறையாய் புரிந்துகொண்டிருந்தான். முருகனின் அப்பா மற்ற மாணவர்களின் அப்பாக்களிடம் எந்த கல்லூரி நன்றாக இருக்கும் என தரவரிசை கேட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒரு தரவரிசை சொல்ல எந்த கல்லூரியில் மகனை சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்.
வரிசையாய் கல்லூரிகள் நிரம்பிகொண்டிருக்க பொன்னுசாமி இடைவிடாது அருகிலிருப்பவர்களை விசாரித்து மீதமுள்ள கல்லூரிகளின் தரவரிசையை மனதில் பதியவைத்துக்கொண்டிருந்தார்.மற்ற அப்பாக்கள் இரண்டு மூன்று பேராவது இவரை மனதில் திட்டியிருக்க வேண்டும், இடைவிடாது அவர்களை நச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வயது முதிர்ந்த அந்த மருத்துவதுறைகளின் இயக்குனர் டை, கோட் சகிதமாக கடக்க அவரை அறிந்தவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். பொன்னுசாமியும் மற்றவர்கள் ஏன் எழுந்தார்கள் என்பதுகூட அறியாமல் மரியாதைக்கு எழுந்து வைத்தார்.
சிறிதுநேரத்தில் அவர்களும் உள்ளே சென்று கல்லூரியை தேர்வு செய்யவேண்டிய கட்டாயம்.பொன்னுசாமிக்கு தரவரிசை மறந்துபோகவில்லை, இன்னும் பத்து மாணவர்கள் அடுத்தது நாம் என சிந்தனையுடன் அமர்ந்திருந்தார். திடீரென பொன்னுசாமியையும், முருகனையும் உள்ளே அழைக்க இருவரும் யார் நம்மை அழைப்பது எனகுழம்பி போனார்கள்.
அந்த முதிர்ந்த மருத்துவ இயக்குனர் தான் இவர்களை அழைத்திருந்தார். முருகனது ரேங்கை கேட்டு மீதமுள்ள கல்லூரிகளை வரிசையாய் அவரே ஒரு சீட்டில் எழுதி பொன்னுசாமியிடம் கொடுத்தார்.மீதமுள்ள கல்லூரிகளை இந்த வரிசைபடி தேர்ந்தெடுங்கள் என்றார்.
பொன்னுசாமிக்கு மிகவும் சந்தோசம், "ஆஹா என்ன ஒரு நல்ல குணம், என் போல் படிக்காதவர்களுக்கு முன்வந்து உதவி செய்வது!!" என கூறிவிட்டு, தான் மனதில் பதித்த கல்லூரிகளின் வரிசைகளை நீக்கிவிட்டு இயக்குனர் எழுதிகொடுத்த வரிசையில் முதல் கல்லூரியையே தேர்ந்தெடுத்துவிட்டார்.முருகனுக்கு அந்த இயக்குனர் முகம் ஏனோ ஆழப்பதிந்து போனது.அவனது மனநிலையில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும், பஸ்ஸில் ஊருக்கு கிளம்பியபோது அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு மிக நெருக்கமாய் அமர்ந்திருந்தான்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் தன்னுடைய தந்தையுடன் கல்லூரியில் நேர்முக தேர்வுக்கு போனபோது நடந்தவைகளை நினைவலைகளாய் யோசித்துக் கொண்டிருந்தார் மருத்துவ இயக்குனர் அவரது குளிரூட்டப்பட்ட அறையில்.

Wednesday, June 9, 2010

நேர்மை என்னும் எதிரி - சிறுகதை - குட்டி

புதிதாக பதவியேற்று அரசுமருத்துவ அதிகாரியாக அந்த ஊருக்குள் நுழைந்த குமாருக்கு வயது 27. அவருக்கு அவரது நண்பன் கூரிய அறிவுரை " உனக்கு கீழ் வேலை பார்க்கும் யாரையும் கண்டிக்காதே, அவர்கள் எல்லோரும் அதே ஊரில் பல வருடங்கள் பணியில் இருப்பார்கள். நீ கண்டிப்புடன் இருந்தால் உன் மீது அரசாங்கத்திற்கு மொட்ட கடுதாசி போட்டு தொல்லை கொடுப்பார்கள்". அது அறிவுரை என்பதை விட, அது அவரது அனுபவம் என்பதே சரியான வார்த்தை. நேர்மையை அதிகம் நம்பி 27 வருடங்களை கடந்த குமாருக்கு நண்பனது அனுபவம் கவலை தரவில்லை.
இந்த மருத்துவமனையில் நிறைய மாற்றங்கள் தேவை என்பது முதல் மாதத்திலேயே தெரிந்தது. மாற்றத்தின் முதல்படி வருகைபதிவேட்டை சரியாக கையாள்வது. தினமும் எல்லா அறைகளையும் சுற்றி வந்த அந்த வருகை பதிவேடு மருத்துவரின் அறைக்குள் அடைக்கலம் புகுந்தது.அத்துடன் மருத்துவ சான்றிதல்களுக்கு வாங்கப்பட்டு வந்த பணம், பிரசவத்திற்க்கு வாங்கப்படும் பணம், ஊசி மற்றும் குளுக்கோசுக்கான பணம் என எல்லாம் நிறுத்தப்பட்டது. குசு குசு என மற்ற ஊழியர்கள் பேசி கொள்வதை குமாரல் உணர முடிந்தது. இரண்டாவதாக மருத்துவமனைக்கு தண்ணீர் விடுவதற்கு பணம் கேட்கும் அந்த பஞ்சாயத்து ஊழியரை ஊர் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க, அதுவும் சரி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்கள் எல்லாம் சரியாக நடந்தது. மூன்றாவது வாரம் மேலதிகாரியின் திடீர் சுற்றுப்பார்வை அந்த மருத்துவமனையில். எல்லாம் சரியாக இயங்கியும் பல தவறுகளை சுட்டி காட்டிய மேலதிகாரி, குமாரை அடுத்த நாள் விளக்கமளிக்க வேண்டினார்.
மேலதிகாரியின் அலுவலகத்தில் குமாரின் நேர்மை விலைபேசப்பட்டது, குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. அடுத்த நாள் முதல் முன்னர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவச்சான்றிதல்களுக்கு நூறு ரூபாயாக விலை நிர்ணயக்கப்பட்டிருந்தது.