Sunday, January 23, 2011

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.


வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி(தமிழகம் தவிர),நாம் சந்திக்கும் ஒரு சங்கடம் - ஹிந்தி.
ஹிந்தி தெரியாமல் பல இடங்களில் சந்தி சிரித்து,ஹிந்தி படித்து கொண்டிருக்கிறேன்.



இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா.? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தமிழன்.முன்பெல்லாம் சில விளக்கங்கள் சொல்வேன்,இப்போதெல்லாம் விளக்கமே கிடையாது.சிரித்து கொண்டே சென்று விடுவேன்.
இந்த விளக்கங்களை கேட்ட பிறகு,அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள்,கேட்கும் கேள்விகள் மகா எரிச்சல்.

1 . ஹிந்தி நம் தேசிய மொழி.அது தெரியாதுன்னு நீங்க சொல்றது ஆச்சிர்யமா இருக்கு.
2 . ஹிந்தி தெரியாமல் நீங்க இங்க வாழ முடியாது (அ) வாழ்றது கஷ்டம்.
3 . அப்போ உங்களுக்கு தமிழ் மட்டுமே  போதுமா?
4 . ஹிந்தி கற்று கொள்வது ஒரு இந்தியனின் கடமை.


நிகழ்வு - 1.(சவுதி அரேபியா)

நான் - ஐ வான்ட் டு கோ டு exit-6 ,
பாகிஸ்தானி - கியா? ஹிந்தி மாலும்?
நான் - ஹிந்தி மபி மாலும்.
பாகிஸ்தானி - அரபி.
நான் - மபி.
பாகிஸ்தானி - உருது.
நான் - மபி.
பாகிஸ்தானி - கியா..? !@$@##&* @### !@#$$$ !@##

அவர் கண்டிப்பாக என்னை திட்டி விட்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் ஒரு சந்தோசம்.அவர் சொன்னது என்ன மொழி என்றே எனக்கு தெரியாது.
பிறகு தான் தெரிந்தது உருதும்,ஹிந்தியும் கொஞ்சம் சொந்தமாம்..ஹிந்தி தெரிந்தால் உருதுவை சமாளிக்கலாம் என்று ..

நிகழ்வு - 2.(துபாய்)

வழிப்போக்கன்1 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - எஸ்,
வழிப்போக்கன்1 - அச்சா,மே !@#$%  !@#$$ ^*())@!!
நான் - மே ஹிந்தி  நஹி மாலும்.
வழிப்போக்கன்1 - மதராசி ? !@#$%  !@#$$ ^*())@!!

நிகழ்வு - 3.(துபாய்)( ஒரு மணி நேரத்திற்கு பிறகு )

வழிப்போக்கன்2 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - நோ, ஸ்ரீலங்கா - தமிழ் .
வழிப்போக்கன்2  -- ஒஹ் ,,,ஒகே..bye .

வெளி மாநிலங்களில்/நாடுகளில்  நம் ஆட்களின் புலம்பல் இது தான்.
ஹிந்தி தெரியாம நாம் கஷ்ட படுறோம் .தமிழ் நாட்டில் ஹிந்தி வேண்டும் .ஹிந்தி வேண்டும்.ஹிந்தி வேண்டும்

சரி,அப்படினா இதுக்கு ஒரே தீர்வு,,பள்ளி பாடத்தில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.






தமிழ்நாடு எங்கள் நாடு,எனக்கு வேண்டாம் ஹிந்தி.

ஏன்?

1 .குஜராத்தில்  மூன்று மாதமாய் இருக்கிறேன்,ஹிந்தி ஆதிக்கம் மிக மிக அதிகம்.சொந்த மொழியான குஜராத்தி வழக்கில் ரொம்ப குறைவு.
இதே நிலை தான் நம் தமிழுக்கும் ஏற்படும்.இந்த ஹிந்தி ஆட்கள்,ஆங்கிலம் தெரிந்தால் கூட,ஹிந்தி மட்டுமே பேசும் ஹிந்தி வெறி புடித்த ஆட்கள்.

2 . வேற்று மாநில மக்கள் எளிதாய் நம் மாநிலம் வந்து குடியேற ஒரு தடைக்கல்,நம்ம தமிழ்.தமிழுக்கு பயந்து இங்கு வராத ஆட்கள் மூலம் நமக்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.
மேலும், வரும் வெளி ஆட்களும் தமிழ் கற்று கொள்வதால் தமிழ் வளர்கிறது.

3 . அப்படியானால் வெளி மாநிலம் செல்லும் நம் ஆட்களின் நிலைமை?,உங்கள் சொந்த விசயமாய் நீங்கள் வெளி செல்வதால்,ஹிந்தி அறிந்து கொள்வது உங்கள் விருப்பம்/கடமை.
நீங்கள்/நான் வெளி மாநிலம் சென்று பிழைக்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வேண்டாமே.
உதாரணம் - என் நாமக்கல் மாவட்டம்,இங்கு முக்கியமான தொழில்,போர்வெல்(ஆழ்துளை கிணறு).இவர்களின் தொழில் இடமே வட மாநிலங்கள் தான்.
இவர்கள் அனைவரும் ஹிந்தி கற்று கொண்டு தான் சிறப்பாக  தொழில் செய்கின்றனர்.

4 . ஹிந்தி வழக்கில் வந்தால் தமிழ் புத்தகங்கள்,தமிழ் படங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.


5. இரு மொழி கொள்கை(தமிழ்,ஆங்கிலம்),நமக்கு ஆங்கில புலமை வளர உதவுகிறது.
ஹிந்தி வந்தால்,அதன் தாக்கம் அதிகமாக அதிகமாக அது ஆங்கிலத்தை பாதிக்கும்(குறிப்பாக கிராமப்புறங்களில்).



எனவே தோரயமாக, ஒரு 7 லட்சம் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ,ஏழு கோடி தமிழ் மக்களும் ஹிந்தி படிக்க தேவை இல்லை என்பது என் கருத்து.

இவை அனைத்தும் ,எனது பார்வையில் ஹிந்தி மொழி .உங்கள் கருத்துகளையும் பகிரலாம்.

--> ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க. 

Thursday, January 13, 2011

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான் - 1

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான்.

சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.
கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொள்ளவும்(கொல்லவும் அல்ல) .
இதோ வந்து விட்டது,மற்றுமொரு தொடர் பதிவு. பரோடாவில் ஒரு பட்டிகாட்டான். மேலும் ஒரு துயர செய்தி.சென்னை வந்தவுடன் "சென்னையில் ஒரு வெண்ணை" தொடரும்.
ஒரு ஆறுதல் செய்தி.வேலை முடிந்தால் தான் சென்னை.ஆனால் வேலை முடிய(?,! $) இன்னும் இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.



பரோடா என்பது குஜராத்தில் ஒரு ஊர்.பரோட்டா என்று படித்தவர்கள் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டியவர்கள்.
அதை இப்போது வடோதரா என்று மாற்றி விட்டார்கள்.எதுக்கு தான் ஊர் பேரை மாத்துராங்கனே தெரியல.
இங்க எனக்கு என்ன வேலை?,,வழக்கம் போல போட்டி போடற வேலை தான்.




பரோடா,உங்களுக்கு நினைவில் கொண்டு வர உதவுவது "Bank of Baroda", அதை ஏன் இன்னும் "Bank of Vadodara" என்று மாத்தல?,அதை மோடி கிட்ட தான் கேக்கணும்.அது யாரு மோடி?,
குஜராத் முதல்வர்,மீடியா மன்னர்,நரேந்திர மோடி.




பரோடாவில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3.மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4.புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5.24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

எனக்கு தெரிஞ்ச ஹிந்தி வார்த்தை, "துமாரா நாம் கியா ஹேய்?",,இந்த பிட்டை,இங்க கொளுத்தி விட்டேன்.
ஆனா எனக்கே அது ரிவிட் அடிச்சிருச்சு.
"துமாரா நாம் கியா ஹேய்" னு கேட்பது மரியாதை குறைவாம்."உன் பேர் என்ன?" மாதிரியாம்.
"ஆப்கோ நாம் கியா ஹேய்"னு தான் சொல்லனுமாம்."உங்க பேர் என்ன?"

அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .

நாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன்.
வருவேன்,தொடர்வேன்..அங்க குண்டு வெடிக்காமல் இருந்தால்.

வளரும் எழுத்தாளானுக்கு  ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.