Saturday, July 31, 2010

இதயம் துடிக்க மறந்த நொடிகள்..இதோ..



பெண் தேடி போனேன்..
அவள் அழகானவளா என்பதற்கல்ல..
அவள் என்னவளா என்பதற்காக..
பேசிப்பார்த்துவிட்டு வந்தேன்..
அவள் குணம் அறிய அல்ல..
என்னை பிடித்திருக்குமா என அறிய..
இதழ் மலர்ந்து..
இமை அடைத்து..
இறுமாப்பு துறந்து..
இதயம் படபடக்க..
இன்சொல் கேட்டேன்..
இவனை "பிடுச்சிறுக்கு"….
இதயம் மொத்தமாய் துடிக்க மறந்தாலும்
இனி இவள் மடிதான்......
                             - குட்டி 

Friday, July 23, 2010

நடுநிசி நச்சுகள்-உறுத்தல்கள்- குட்டி

பொள்ளாச்சியின் ஒரு தனியார் மருத்துவமனை, அந்த நடுநிசி 2 மணியை லேசான சிறு துளிகள் நனைத்து ரம்யமாக வைத்திருந்தது. வராண்டாவை தவிர்த்து பெரும்பாலான அறைகளின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.
நெங்சு வலி வந்த பெரியவருடன் உள்ளே நுழைந்த உறவினர்கள் அந்த மருத்துவமனையின் அமைதியை குழைத்து ரகளையில் இறங்கியிருந்து. "டேய் உடனே ரமேஷ் டாக்டர கூப்பிடுங்கடா, என் பேர சொல்லுங்கடா அவருக்கு தெரியும்"என யாரோ ஒருவர் பணி மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வந்த ஈ.சி.ஜி ரிப்போர்ட் அது "ஹார்ட் அட்டாக்" என்பதை உறுதி செய்திருந்தது. கூடவே இருதய துடிப்பும் , இரத்த அழுத்தமும் மிக குறைவாய் இருப்பதை உணர்ந்த மருத்துவர் " சார் இவருக்கு இங்கு முதலுதவி மட்டுமே செய்ய முடியும். மேற்சிகிச்சைக்கு கோயம்புத்தூர் தான் செல்ல வேண்டும்" என கூற வந்தவர்கள் ரகளையை அதிகபடுத்தியிருந்தனர்.
நோயாளிக்கு இருதய வலிக்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, வாந்திக்கான ஊசி போடப்பட்டு ஆம்புலன்சில் கோயம்புத்தூருக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர்கள் கோயம்புத்தூர் செல்லாமல் அருகிலிருந்த இன்னொரு மருத்துவமனையில் பிரச்சனையை புதிதாக ஆரம்பித்திருந்தனர். அடுத்த ஆஸ்பத்திரி போகும் வரை அமைதியாயிருந்த அந்த கும்பல் நோயாளியை இறக்கியவுடன் ஆம்புலன்சு டிரைவரிடம் "நோயாளி இறந்தா காலையில் உங்க ஆஸ்பத்திரி மேல கல் எறியறோம் பாருங்கடா" என சத்தம் போட, கடுப்பான டிரைவர் "வந்து எறிஞ்சு பாருங்கடா"என கூறிவிட்டு சவாரிக்கான வாடகை கூட வாங்காமல் கிளம்பினார்.
இந்த பிரச்சனையை பார்த்துக்கொண்டிருந்த இரண்டாவது மருத்துவமனை ஊழியர்கள் அந்நோயாளியை கோயம்புத்தூர் அனுப்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.
நிதர்சனங்கள்:-
1) அட எல்லா டாக்டரும் மனுசங்கதான்யா! அவங்க தூங்க வேண்டாமா?அவசரத்திற்கு வேற டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்க மாட்டங்களோ!! பார்த்த டாக்டரே அவ்ர் இருதயநோய் மருத்துவத்தில் தனியாக பயிற்சி பெற்றவர் என கூறியும் நம்பிக்கை இல்லை!
2) தண்ணி போட்டுட்டு வந்து அராஜகம் பண்ணினா, உடனே பயந்து நடுங்கி வைத்தியம் பாக்கணுமா?[ லொள்ளு பண்றவங்களுக்கு எந்த மருத்துவமனையும் வைத்தியம் பண்ண முன் வராது! நமக்கு எதுக்கு பிரச்சனைனு!]
3) இந்த நச்சுகளின் தொந்தரவை தவிர்க்கவே பெரும்பாலான மருத்துவமனைகள் இரவில் நோயாளிகளை உள்ளே கூட விடுவதில்லை.
4)மக்கள் படம் பார்த்து, பேப்பர் படிச்சு ரொம்பவே கெட்டு போய்ட்டாங்கப்பா! எல்லா மருத்துவமனைகளும் காசு புடுங்கறாங்கன்னு கெளப்பிவிட்டதால எவனுக்கும் எந்த டாக்டர் மேலயும் நம்பிக்கையில்லை!(நம்பாமல் போனா நஷ்டம் ஒண்ணும் டாக்டருக்கு இல்லயே!). இனிமே மக்கள் படத்தோட இயக்குனர்கிட்டயும் , நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டர்கிட்டயும் வைத்தியம் பாத்துக்கோங்கப்பா![அட பாவிகளா நாங்க தியேட்டர் போய் படம் பார்த்து பல நாட்கள் ஆச்சே!]

மொத்தத்தில் நடுநிசி நச்சு
* அது மருத்துவரை பொறுத்தவரை இது போன்ற நோயாளிகள்
* அது நோயாளியை பொறுத்தவரை மருத்துவர்கள். வெளங்கிடும் இந்த நாடு....

Friday, July 2, 2010

அம்"மனம்" - கவிதை - குட்டி

அரைகுறையென்பது ஆபத்தென்றறியாத
அரை வேக்காட்டு முட்டாளாய்!
ஆட்சியெனும் ஆர்வத்தில்
அலங்கோலமாய் படைக்கப்பட்டாய்!
அமைதியென்னும் அதிர்வை
அறியாத சினமாய்!
அன்பென்ற ஆத்திச்சுவடியை
அழித்துக்கொண்ட நெஞ்சமாய்!
அழகான மனமொன்றை
அழித்துவிட்ட மூர்க்கனாய்!
அனுபவங்கள் அலையாட
அந்தரங்கள் ஆசையாய்!
ஆர்ப்பரிக்கிறேன் ஆசையாய்
அமைதியான மனத்திற்காய்!
அன்பு, அழகு, அறிவு,அனுபவம்,அமைதி எனுமிந்த ஐந்து
ஆக்கங்களை அளிப்பாயா? இந்த அற்பனுக்கு ஆதரவாக!
- குட்டி