Wednesday, February 23, 2011

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,9 லட்சத்து 59 ஆயிரம் பேர் பற்றிய மனவருத்தமும்

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,மனவருத்தமும்.

தமிழக அரசின் வருவாய் துறையில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 3,484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்டு நடைபெறும் இந்த தேர்வு எழுத கடும் போட்டி நிலவியது.  10 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழ்நாடு முழுவதும் 104 நகரங்களில் 3,465 மையங்களில் தேர்வு நடந்தது. 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் பிப்ரவரி -21 அன்று தேர்வு எழுதினார்கள். (நன்றி : மக்கள் முரசு ).

கிராம நிர்வாக அதிகாரிக்கான தகுதி ,வெறும் பத்தாம் வகுப்பு.ஆனால் இந்த தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் இளநிலை,முதுநிலை பட்டதாரிகள். எனக்கு தெரிந்த சில பொறியாளர்களும் இந்த தேர்வினை எழுதி உள்ளனர்.
ஏன் ?
1.வேலை இல்லாமை.
2.இருக்கும் வேலையில் நாட்டம்(விருப்பம்) இல்லாமை.
3.அரசு வேலை வேண்டும் - குறைவாய் வேலை செய்ய.
4.அரசு வேலை வேண்டும் - லஞ்சம் வாங்க.
5.மற்றவை.


இதில் எந்த தகுதியில் வந்தாலும்,இளைய தலைமுறையில் 9 லட்சம் பேர் வேலையில்லாதவர்கள் (அ) வேலையில் நிறைவு கொள்ளாதவர்கள் என்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விசயம்.இதை ஏன் யாரும் கவனிக்கவில்லை.?
அப்படியானால்,கிராம நிர்வாக அதிகாரி தேர்வு எழுதி வேலை கிடைக்காத 9 லட்சத்து 55 ஆயிரம் பேரின் நிலைமை.? இதற்கு அரசின் பதில் என்ன ..?



எதையும் அரசியலாக்கும்,வியாபாரமாக்கும் ஆட்கள் இந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.
காலி பணியிடங்கள்(இட,இன ஒதுக்கிடுகள் ) ,தகுதி,எதிர்கால முன்னேற்றம் இதை பற்றி எல்லாம் விளக்கி சொல்லாமல்,அனைவரையும் இந்த தேர்வு எழுத சொல்லி வீணாக்கியவர்கள்.
சில நாளிதழ்கள் இதற்கு என்று தனி பக்கம் ஒதுக்கி விளம்பரம் தேடி கொண்டன. பெரும்பாலான டுடோரியல் சென்டர்கள் VAO பயிற்சி முகாம் என்று மாணவர்க்கு 10 ,000 பணத்தை கரந்தன. இதற்கு  என்று சிறப்பு புத்தகங்கள் வெளியிட்டு காசு பார்த்தன.

தேர்வு எழுதும் முன், இதை எல்லாம் கவனித்தார்களா.?

அரசாங்க தேர்வு என்பது, சதி ,மத இட ஒதுக்கிடுகளை கொண்டது. பெரும்பான்மை சமூகமான BC (பொது) பிரிவுக்கான வெற்று இடம் - 254 மட்டுமே.மற்றவை கீழே.
இது தெரிந்து தான் 6 மாதம் இதற்காக ஒதுக்கி படித்து இருந்தார்களா?



http://www.tnpsc.gov.in/Notifications/dist_of_vacancies_vao2k10.pdf

நண்பர் கணேஷ் , பிரதமர்க்கு பாஸ்போர்ட் வழங்குவதை தீர்மானிக்கும் தகுதி உடைய பதவி, கிராம நிர்வாக அதிகாரி.மேலும் ,அனைத்தும் இளைஞர் கையில் .நல்லது செய்வார்கள் என்று நம்புவோம் என்றார்.

எனது வருத்தம் எல்லாம் பதவி பெற போகும் 3,484 பேர் பற்றியது அல்ல.மீதம் இருக்கும் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் பற்றியது .
மேலும் இந்த அரசு தேர்வு ,நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.


காலம் பதில் சொல்லும்.

Friday, February 18, 2011

வருத்தபடா வாலிபர் சங்க முன்னாள் தலைவர் - அண்ணன் அசோக்குமார்


சிலருக்கு அழகு உண்டு ஆனால் அறிவு இல்லை ,
பலருக்கு அறிவு உண்டு  ஆனால் அழகு  இல்லை,
ஆனால் தலைவா,உனக்கு மட்டும் தானே,
இரண்டும் இல்லை.

எவர் எம்மை விட்டு சென்றாலும்,
எதற்கும் அஞ்சா சிங்கமாய்,
அவமானம் எல்லாம் சங்கத்தின் அடிமானம் என்று,
சங்கத்தை  காத்த எங்கள் தலைவனே.

நீ தான் சங்கத்தின் நிரந்தர தலைவன் என்று
நினைத்து இருந்த பொழுதில்,
நிர்மூலமாய் தவிக்க விட்டு
சங்கம் வேண்டாம் என்றும்
சம்சாரம் வேண்டும் என்று சென்ற எங்கள் சிங்கமே !!!.

நீ சங்கத்தை விட்டு சென்றாலும்,
நீ சேர்த்து வைத்த பெருமையையும்,கடனையும் 
இனி எக்காலமும் சங்கத்தால் அடைய முடியாது.

தலைவா,தன்னிகரற்ற எங்கள் தானை தலைவா,
தலைவியுடன் நீ பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறோம்.

-வருத்தபடா வாலிபர் சங்கம் - பதிவு எண் - 29844111 / 1995

வருத்தபடா வாலிபர் சங்க  முன்னாள் தலைவர் - 
"ஆட்டையாம்பட்டியின் அரிஸ்டாட்டில்" அண்ணன் அசோக்குமார் - திருமண நாள் - 21st Feb 2011

சோலையப்ப கவுண்டர் திருமண மண்டபம்,ஆட்டையாம்பட்டி

அண்ணனின் திருமண விழாவிற்கு அனைவரும் வருக,நல்லாதரவு தருக.

சங்கத்தின் புது தலைவருக்கான தேர்தல் ஆலோசனை 22 மாலை 7 : 30   மணியளவில் தொடங்கும்.

தகுதிகள்:


1 .வயது 30 க்கும் மேல்.
(58 கும் கீழ்)
2 .அறிவும்,அழகும் இல்லாதிருப்பது.
3 .அடிவாங்க உடம்பில் தெம்பு.
4 .நெருக்கடி நேரங்களில்
உடனடியாய் சங்கத்தை கலைக்கும் திறன் 
5.தலை மறைவாக இருக்க வேண்டிய அளவிற்கு ஒரு வீடு.
(வீடு கட்டி அடிவாங்க) 

Monday, February 14, 2011

நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து

நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து 


காதல்,ஒரு அழகான சொல். காதல் செய்ய பணமோ,அழகோ,அறிவோ தேவை இல்லை.உண்மையை சொல்ல போனால், அறிவு சற்று கம்மியாக இருப்பது அதிக பலனை தரும்.காதலை நான் அனுபவித்தது இல்லை.அனுமானித்தது உண்டு.

எனக்கும் சில சமயங்களில் காதல் வரும்,உற்று நோக்கினால்(நோக்கினாள் அல்ல) அவை எல்லாம் உண்மையான காதல் அல்ல ,ஒரு affection (இனக்கவர்ச்சி) அவ்வளவு தான்.
ஏன்? காரணங்கள் எளிது,ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை பிடிக்கும் (அல்லது ) ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணை பிடிக்கும்.பெண் தோழிகள் என்று எடுத்து கொண்டால்,ஒரு நான்கு வரலாம்.அதுவும்,மாதத்திற்கு ஒரு முறை பேசுவேன் அல்லது அதுவும் பேச மாட்டேன். இவர்கள் அனைவரும்,என்னை மிக நீண்ட நாட்களாய் தெரிந்து(வருட கணக்கில்) ,பின் தோழி ஆனவர்கள்.

நான் ஏன் இப்படி ஆனேன்? நான் ஆணாதிக்க வெறி பிடித்தவனா?. ஆம் - இல்லை

உயர்நிலை  நாட்கள் - சிறு வயதில்,பள்ளி பருவத்தில் ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது(வழக்கமான கதை தான் ). கதாநாயகன் வந்தான்,கதாநாயகியை கவர்ந்தான்,நான் வில்லன் ஆனேன்.அது தோற்று போனதில் காதலின் எதிரி ஆனேன்.படிப்பில் முதல் இடம் (அல்லது முதல் மூன்று இடங்களுக்குள்) மற்றும் துணைக்கு என் அப்பா நான் படித்த பள்ளியின் ஆசிரியர்.இது போதாதா காதலின் எதிரியாக???

மேல் நிலை நாட்கள் - மேல் நிலை படிப்பிற்காக விடுதிக்கு போனேன்.அது ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.பொண்ணுங்க,பசங்க பாக்க கூடாது,பேசக்கூடாது னு சொன்னங்க.அவங்க சொன்னதில்,நான் பின்பற்றிய ஒரே கருத்து இது தான். பேச்சு போட்டியில்  (http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html ),பள்ளி எங்கும் என் புகழ் பரவி,மேலும் சில பல சித்து வேலைகள் செய்து,கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, படிப்பை மறந்து திரிந்த காலம்.இந்த காலங்களில் நான் இரண்டு பெண்களிடம் பேசி இருக்கிறேன். பேசியது இது தான்.உங்க ரெகார்ட் நோட் குடுங்க,மிஸ் மார்க்கை கூட்டி சரி பார்க்க சொன்னாங்க..அதற்கு மேல்,எதுவும் நியாபகம் இல்லை.

நான் பெரும்பாலும்,என் நெருங்கிய நண்பர்கள் உட்பட,வாங்க-போங்க என்று  தான் கூப்பிடுவேன்.இதை பலரும் விரும்புவது கிடையாது.

கல்லூரி நாட்கள் - பெண்களிடம் பேசியது குறைவு என்பதால்,ஒரு தயக்கம் இருந்தது.இதற்குள் எனது நண்பர்கள்,அனைத்து வாய்ப்பையும் அணைத்து விட்டார்கள். மேலும்,திருமலை என்ற பெயரால் ரோல் நம்பர் - 52 ,எந்த பெண்ணும் t ,u,v,w ,x ,y ,z  என்ற பெயரில் வராததால் 50 - 60  அனைவரும் மாணவர்கள்.
வழக்கம் போல,internal டெஸ்டில் 50 - 60 ரோல் நம்பர் ஆன  நாங்கள் எல்லாம் பெயில் ஆக,வந்தது வினை.நிறைய பேர் பெயில் ஆகி இருந்தாலும்,நாங்கள் மட்டும் ரவுடி கும்பல் எனப்படும் "v" குரூப் ஆனோம்.(50 - 60   ரோல் நம்பர் ல் , 7 மாணவர்கள் "v" யை ஆரம்பமாக கொண்டவர்கள்).எங்களை கண்டால் எல்லாரும் கதறுவார்கள்.நான் இந்த சங்கத்துக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தேன்.இந்த சங்கம்,பகலில் சிங்கமாகவும்,இரவில் பெண்களின் செல் சங்கமம் ஆகவும்  இருந்தது,பின்னாளில் தான் தெரிய வந்தது.
இதனால் கல்லூரியில் என் காதல் "லேது,நகி ,இல்லை,மபி".

வேலை நாட்கள் -
ஒரு பெண் அதியசம் ஆக chat ல் வந்தது ,ஸ்கூல் பிரண்ட் என்றது.
அடுத்த நாள் காலை,"hi da " என்றது,நான் உடனே,"hi di " என்றேன்.அவ்வளவு தான் ,என்னை பிளாக் பண்ணிவிட்டது(block தான் ,blog அல்ல) .
நண்பனிடம்,கேட்டால்,ஐயோ,இதெல்லாம் பன்னப்பிடாது என்றான்.

இதை எல்லாம் படித்து விட்டு,ஒரு பேக்கு,சோடாபுட்டி கண்ணாடி,படிந்த எண்ணெய் போட்டு வாரிய தலை,தொள தொள சட்டை,பேண்ட்  என்று உருவம் செய்தால் ,அது தான் நான் - க. திருமலை. பாஸ்போர்ட்,விசா ,கிரெடிட் கார்டு,பான் கார்டு,லைசென்ஸ் என்று எல்லாவற்றிலும் தன் தமிழ் பெயரை முழுதாய் எழுதி, கையெழுத்து என்று சொல்லி,பலரை அலற (அழ) வைத்தவன்.

நான் காதல் வயப்படா காரணம்,


1 . பெண்களை மதிக்காமல் ,அதிகமாய் நக்கல் செய்வது.அதிகமான பேச்சு.
2 . பெண்களிடம் ம்,ம் என்று அரை மணி நேரம் சொல்ல ,பொறுமை இல்லாமை. சாப்டியா?,தூங்கினியா? என்றெல்லாம் சொல்லாதது.
3 . வாங்க,போங்க என்று நான் சொல்லுவதால்,நான் சின்னப்பையனாக ஆகி ,அவர்கள் அக்கா ஆவதாக எண்ணி அரண்டு போய் ஓடிப்போனது.
4 . ஜாதி பிரச்சனை - நான் பாட்டுக்கு,கல்யாணம் பண்ணி கொண்டு போனால் ,கிராமத்தில் இருக்கும் என் பெற்றோரை நேரடியாய் பாதிக்கும் என்று எண்ணியது.முக்கியமாய் ரெண்டு பக்கமும் அடி பின்னிடுவாங்க என்ற பயம்.
5 . ஹீரோ என்று எண்ணி பல செயல்கள் செய்து காமெடியன் ஆனது.
6 . சம வயது பெண்களிடம் பழக  அதிக வாய்ப்பு இல்லாமை.அக்கா,தங்கை இல்லாமை.வீட்டில் ஒரே பையன்-தனிக்காட்டு ராஜா எல்லாம் கிடையாது.
எங்கம்மாவிடம் - தினமும் அடி வாங்குவேன் சிறுசாய்,
அப்பாவிடம் - எப்பவாவது வாங்குவேன் பெருசாய் .


இப்படி எல்லாம் நான் காரணங்கள் சொன்னாலும்,உண்மை இது தான்.
எனக்கு காதலிக்க வாய்ப்பு வரவில்லை.வாய்ப்புகளை உருவாக்க தெரியவில்லை.

காதலிப்பவர்கள் காதலில் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.

 நன்றி (love image )-  http://www.nkdreams.com/poems/?p=21