அப்பா என்னை விடுதியில்(Hostel) தான் சேர்த்து விட்டார்.இந்த விடுதி வாழ்க்கை ,புதிய நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.காலை எழுந்தவுடன் study hours ,அது முடிந்ததும் குளிச்சிட்டு ஸ்கூல் கு கிளம்ப வேண்டியது தான் .அன்றும் வேகமாய் குளிக்க ஓடினேன்.பொது குளிலறைகள் என்பதால் சற்று நேரம் காக்க வேண்டி வரும் .மொத்தம் ஆறு குளியல் அறைகள்.எல்லாத்திலையும் தண்ணி சத்தம் கேட்க, ஓன்னு மட்டும் சும்மா சாத்தி இருந்தது.திறந்து பார்த்தால் ,எவனோ பச்சை நிற பக்கெட் ஒன்றை முறைக்கு போட்டு விட்டு போய் இருந்தான் .அந்த பக்கெட்டை எடுத்து வெளியில் போட்டு விட்டு ஆனந்தமாய் குளித்தேன்.வெளியில் வந்து பார்த்தால்.. தமிழ் ஐயா நின்னு கிட்டு இருந்தார் ,கையில் பச்சை பக்கெட் உடன் .
இவரு பெரிய ராஜா ,அவ்ளோ அவசரமா? அப்படி அவசரமா போய் என்னத்த கிழிக்க போற? போடா போ ..என்றார் தமிழ் ஐயா..தப்பு என் பேரில் இல்லை. எனக்கு கோவமாய் வந்தது.
டேய்,என்னடா இப்படி பண்ணிட்ட? என்றான் ரமேஷ்.இருந்த கடுப்பில்,போடா.. அந்த ஆளு என்னத்த பண்ண போறான்..அந்த ஆள் தான் நம்ம class கே வரது இல்ல .போடா என்றேன்.அந்த பாசக்கார பயபுள்ள, அதை அப்படியே போய் அவரிடம் சொல்லி விட்டான் போல..
சாயங்காலம்.
என்ன ,நான் உங்க கிளாஸ் கு வரலை னா,எதுவும் பண்ண முடியாதோ?practical marka போட போறான் ..சொன்னையா என்றார் தமிழ் அய்யா?..தலை குனிந்து நின்றேன்.நேரம் வரும், பார்த்துக்கிறேன் என்றார் அவர்.
மனதுக்குள்..அட துரோகி ரமேஷ், practical மார்க் னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் சேர்த்து போட்டு தள்ளி விட்டாயே பாவி .பிறகு அந்த சம்பவத்தை மறந்தே போய் விட்டேன்.
ஆகஸ்ட் - 14 .ஸ்கூல் மீட்டிங் .
HM பேசுகிறார்,மாணவர்களே - நாளைய சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு "என்று தணியும் அடிமை தாகம் " என்ற தலைப்பில் 15 மாணவர்கள் பேச உள்ளார்கள் .அவர்களில் சிறப்பாய் பேசுபவர் நாளை சுதந்திர தின மேடையில் பேசலாம் என்றார்.எல்லோரும் கை தட்டினார்கள்.
15 பேர் கொண்ட பட்டியலை வாசித்தார் தமிழ் அய்யா.ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்து முன்னாடி போய் மேடை பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.பெரும் அதிர்ச்சியாய் ,15 ஆக என் பெயர்.தெளிவாய் தெரிந்தது.தமிழ் அய்யா பலி வாங்கி விட்டார் .என்ன செய்வது என்றே தெரியலை..முன்னாடி போய் அமர்ந்தேன்.
மீண்டும் கை தட்டல்.
முதலாவதாய் ஒருத்தன் வந்தான் ,அவன் சொல்லி தான் தலைப்பே ஒழுங்காய் தெரிந்தது.
"என்று தணியும் அடிமை தாகம். " எவன் தான் இப்படி எல்லாம் தலைப்பை எழுதி தரானோ தெரியல..இதுல போய் என்னத்த பேசுறது?முடிஞ்சது கதின்னு உக்காந்து இருந்தேன்.சங்க இலக்கியம்,பெண் அடிமை னு எதையோ பேசி கிட்டு இருந்தாங்க.நன்கு பேர் பேசி முடித்ததும் ஒரு முடிவுக்கு வந்தேன்.ஒழுங்கா பேசி ,நம்மை மாட்டிவிட்ட தமிழ் அய்யா மூஞ்சில கரி பூசனும்.
யோசித்தேன் ,எதுவும் தோன்ற வில்லை.எழுத பேனா எடுத்தேன்(Made in China ),கிடைத்தது ஒரு பாயிண்ட்.அந்த பாயிண்ட் இது தான் 'எல்லாரும் Made in china ,Made in USA னு பெருமையா சொல்றோமே ,ஏன் யாரும் Made in India னு சொல்லறது இல்ல '.
அதுக்குள்ள 14 பேறும் பேசிட்டாங்க போல.நான் போனேன்.வணக்கம் சொல்லி ,எதையோ பேசினேன்.வழக்கம் போல ,மாணவர்கள் எல்லோரும் கொடுமையே னு கேட்டு கிட்டு இருந்தாங்க.சட்டென யோசனை வந்துச்சு..அது என் வந்துச்சு னு தெரியலை..ஜவுளி கடை முன்னாடி விளம்பரம் 'Titanic saree'..பாயிண்ட் கிடைச்சுது (மிக பெரிய turning பாயிண்ட் னே சொல்லலாம்).
பேசினேன் .
"நம்ம ஊர்ல பொண்ணுங்க எல்லோரும் Titanic saree னு வெளி நாட்டு அடிமை மோகத்துல saree வாங்கி கட்றாங்க ,ஆனா உண்மை என்னன்னா titanic படத்துல கதாநாயகி saree கட்டுவதும் இல்ல,ஒன்னும் இல்லை னு "
மாணவர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.நான் மகிழ்ந்து போனேன்.ஆகா!!,நமக்குள்ள இவ்ளோ திறமை இருக்குது ..தெரியாம போச்சான்னு நினைச்சேன்.பெரும் கைதட்டலோடு இறங்கி வந்தேன்.
15 நிமிட இடைவேளைக்கு அப்புறம் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றார் தமிழ் அய்யா.
இரண்டு அடி வைப்பதிற்குள் ,HM கூப்பிடறார் என்றார் ,PT சார்.
பந்தாவாய் HM ஆபீஸ் போனேன் .கண்ணாடிய கழட்டுனார்.பளார்னு அறை விழுந்தது .எதிர்பார்க்காத அறை.ஆடி போய் நின்றேன்.
ஏன்டா,Titanic படத்துல Herione dress போட்டா உனக்கு என்ன ,போடலைனா உனக்கு என்ன ?அத மேடை ல வேற சொல்லுவியா? அறிவு இல்ல?என்றார்.
இல்ல சார் ,நான் சொல்ல வந்ததே வேற ,,saree பத்தி தான் .
வாய மூடுடா ,என்றார்.யார் உன் பேர சேத்துனது, என்றார்?
தமிழ் அய்யா தான் வேணும்னே பேர போட்டுட்டார் என்றேன்.
அவரு போட்டா ?,எத்தன பேரு பாதியில் பேச முடியாம போன்னாங்க?நீயும் அப்படி போக வேண்டியது தானே?
போய் பேசாம உட்கார் என்றார் ,HM .உட்கார்ந்தேன்.
என் பேச்சின் அர்த்தம் மாறி போனதை உணர்ந்தேன்.அதுக்கு தான் கை தட்டுனாங்களா பசங்க?ஐயயோ....
தமிழ் அய்யா வாசிக்கிறார்,வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ,
பத்மநாபன் (பெண் அடிமை பேசியவன்),அன்ன பூரணி (என்ன பேசுச்சுனே எனக்கு தெரியாது).
பின் பக்கத்தில் ஒரே சலசலப்பு,நிறைய மாணவர்கள் எழுந்து சத்தம் போட்டார்கள்.தமிழ் மீடியம் மாணவர்களை வேண்டும் என்றே ஒதுக்கி விட்டதாய் சொன்னார்கள்.ஒருவன் சத்தமாய் என் பெயரை சொல்லி ,பரிசு தர வேண்டும் என்றான்.ஆசிரியரின் தடிக்கு பயந்து கும்பல் அமைதி ஆனது.
அட பாவிகளா!,நான் என்னடா பண்ணுனேன்.என் பெயரை சத்தமாய் சொன்ன அந்த துரோகி யார்?.ஒரு வேலை அந்த ரமேஷ் யாய் இருப்பானோ?போச்சு ,என் கதை இன்னிக்கு முடிஞ்சது.
மீண்டும் HM ரூமுக்கு அழைப்பு வந்தது,இந்த முறை பயந்துகிட்டு தான் போனேன்.
முடியை பிடித்தார் .என்னடா,நீ என்ன பெரிய ரவுடி யா ? உனக்கு கோஸ்டி வேற?
முதுகில் இரண்டு அடி விழுந்தது.இனிமேல் உன்ன பத்தி எதாவது எனக்கு தகவல் வந்தது அவ்வளவு தான்.போடா என்றார்.
உள்ள அடி வாங்கினதை யார் கிட்டயும் சொல்லல?HM நெறைய points பேசனும்னு சொன்னார்னு சமாளிச்சேன்.கம்முனு மேடை ஏறி வணக்கம் ,போட்டுட்டு வந்திருக்கலாம்.தேவை இல்லாம பேசி ,வம்ப விலைக்கு வாங்கினது தான் மிச்சம் .நைசா ஒருத்தண்ட Titanic படம் பத்தி விசாரிச்ச அப்புறம் தான் ,HM ஏன் அடிச்சாருன்னு நல்லா வெளுங்குச்சு..
அடுத்த நாள் காலை குளிக்க போனேன் ,கதவை திறந்தேன் .பச்சை நிற பக்கெட் இருந்தது.அன்று குளிக்கவே இல்லை.எனக்கு,ஒன்று மட்டும் புரியவே இல்லை.
"என் பெயரை சத்தமாய் சொல்லி ,பரிசு தர வேண்டும் என்றானே? அவன் யார்?.அவன் எதிர்பார்த்த பரிசு தான் என்ன ?"
நல்லதோ ,கெட்டதோ நாலு வார்த்தையை comment ல போடுங்க.
Good one.. all the best for your future"பளார்னு அறை" brother.
ReplyDeleteThank you Mr.Jayakumar palanisamy.
ReplyDeleteநன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றி ,"பெயர் சொல்ல விருப்பமில்லை"
ReplyDeleteநல்ல இருக்குங்க... நடை நல்லா இருக்கு.. வாழ்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம்குமார்.மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்கள் கருத்தை அறிந்ததில், தொடர்ந்து எழுதலாம் போல?
ரொம்ப நல்லா இருக்குங்க...
ReplyDeleteவாசிக்கும் போது என் கல்விப் பருவத்தை நினைவு படுத்தியது. அதுவே ஒரு எழுத்தாளனுக்கு வெற்றி.
ஒரு இடத்திலயும் போர் அடிக்கல. எலிகன்ட்லி சிம்பிள் என்றும் சொல்லலாம். அருமையான நடை.
வாழ்த்துக்கள்.
என் கதையையும் மதிச்சு ஒருத்தரு comment போட்டுட்டார் னு மெயில் வந்ததும் பார்த்தேன்,மகிழ்ந்தேன்.
ReplyDeleteநண்பர் படுக்காளி என்னை எழுத்தாளன் என்று சொல்லிவிட்டார்.நன்றி நண்பரே.
எதோ சப்தம் -->"ஐயயோ ,இத சக்கா வெச்சே இன்னொரு பதிவு போடுவானே இவன்."
சப்தம் இட்டது "மனசாட்சி "
அன்பரே !
ReplyDeleteதங்கள் கதை மிகவும் அருமை... வாழ்த்துகள்.. நல்ல ஒரு இயல்பான நகைசுவை கலந்த கதை ... வைகை புயல் வடிவேலுவ நினைவுபடுத்தியது..
செல்லத்துரை, மதுரை
cdhurai@gmail.com
@துரை@.தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி .
ReplyDeleteநான் ஒரு மொக்கையா கமெண்ட் கொடுத்தாலும் அதுக்கும் ஒரு பதில் கமெண்ட் கொடுத்து எண்ணிக்கைய கூட்டிக்க போறே... வாழ்க மொக்கை உலகம்... உன்னை மாதிரி நாலு வெட்டி பசங்க இருக்கறதால தான் என்ன மாதிரி வெட்டி பசங்களுக்கு எல்லாம் பொழுதே போகுது...
ReplyDeleteவித்யாசமா இருக்கு. நான் அடி வாங்கிய நினைவுகள் வந்து போகின்றன.
ReplyDeleteநானும் இந்த கதை போட்டியில் கலந்துள்ளேன். அடுத்த வீட்டு பெண் கதை படிக்க இங்கே கிளிக்கவும் : http://veeduthirumbal.blogspot.com/
மோகன் குமார்
லேபல் நன்றாக உள்ளது
ReplyDeleteMugavathi-->No comments.
ReplyDeleteMohan kumar-->Thaks for your comment.
Balaji-->Oh..Thanks..
nalldhu kattathu 1234 varthi poduma nadpudan nakkeeran
ReplyDeletefacebook likes
ReplyDelete1000 facebook likes
http://www.cdapress.com/news/business/article_980d4e52-05d9-5306-8166-02a2f912df2a.html http://www.homelessnation.org/en/node/15316
buy facebook likes buy facebook likes buy facebook likes
I don't know what it is but after i uninstalled a virus it deleted a lot of the scripting for programs to work and now it keeps de-selecting things as i'm doing them. Like i'm trying to play a game and it keeps de-selecting the whole game so it minimizes the entire game and i have to re-click it again, same with firefox, it even tries to close it. If anyone knows how to deal with this, any help would be appreciated
get facebook likes buy facebook likes [url=http://1000fbfans.info]get facebook likes [/url] facebook likes
Very nice.
ReplyDelete