Showing posts with label பயண அனுபவங்கள். Show all posts
Showing posts with label பயண அனுபவங்கள். Show all posts

Sunday, January 23, 2011

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.


வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி(தமிழகம் தவிர),நாம் சந்திக்கும் ஒரு சங்கடம் - ஹிந்தி.
ஹிந்தி தெரியாமல் பல இடங்களில் சந்தி சிரித்து,ஹிந்தி படித்து கொண்டிருக்கிறேன்.



இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா.? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தமிழன்.முன்பெல்லாம் சில விளக்கங்கள் சொல்வேன்,இப்போதெல்லாம் விளக்கமே கிடையாது.சிரித்து கொண்டே சென்று விடுவேன்.
இந்த விளக்கங்களை கேட்ட பிறகு,அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள்,கேட்கும் கேள்விகள் மகா எரிச்சல்.

1 . ஹிந்தி நம் தேசிய மொழி.அது தெரியாதுன்னு நீங்க சொல்றது ஆச்சிர்யமா இருக்கு.
2 . ஹிந்தி தெரியாமல் நீங்க இங்க வாழ முடியாது (அ) வாழ்றது கஷ்டம்.
3 . அப்போ உங்களுக்கு தமிழ் மட்டுமே  போதுமா?
4 . ஹிந்தி கற்று கொள்வது ஒரு இந்தியனின் கடமை.


நிகழ்வு - 1.(சவுதி அரேபியா)

நான் - ஐ வான்ட் டு கோ டு exit-6 ,
பாகிஸ்தானி - கியா? ஹிந்தி மாலும்?
நான் - ஹிந்தி மபி மாலும்.
பாகிஸ்தானி - அரபி.
நான் - மபி.
பாகிஸ்தானி - உருது.
நான் - மபி.
பாகிஸ்தானி - கியா..? !@$@##&* @### !@#$$$ !@##

அவர் கண்டிப்பாக என்னை திட்டி விட்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் ஒரு சந்தோசம்.அவர் சொன்னது என்ன மொழி என்றே எனக்கு தெரியாது.
பிறகு தான் தெரிந்தது உருதும்,ஹிந்தியும் கொஞ்சம் சொந்தமாம்..ஹிந்தி தெரிந்தால் உருதுவை சமாளிக்கலாம் என்று ..

நிகழ்வு - 2.(துபாய்)

வழிப்போக்கன்1 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - எஸ்,
வழிப்போக்கன்1 - அச்சா,மே !@#$%  !@#$$ ^*())@!!
நான் - மே ஹிந்தி  நஹி மாலும்.
வழிப்போக்கன்1 - மதராசி ? !@#$%  !@#$$ ^*())@!!

நிகழ்வு - 3.(துபாய்)( ஒரு மணி நேரத்திற்கு பிறகு )

வழிப்போக்கன்2 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - நோ, ஸ்ரீலங்கா - தமிழ் .
வழிப்போக்கன்2  -- ஒஹ் ,,,ஒகே..bye .

வெளி மாநிலங்களில்/நாடுகளில்  நம் ஆட்களின் புலம்பல் இது தான்.
ஹிந்தி தெரியாம நாம் கஷ்ட படுறோம் .தமிழ் நாட்டில் ஹிந்தி வேண்டும் .ஹிந்தி வேண்டும்.ஹிந்தி வேண்டும்

சரி,அப்படினா இதுக்கு ஒரே தீர்வு,,பள்ளி பாடத்தில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.






தமிழ்நாடு எங்கள் நாடு,எனக்கு வேண்டாம் ஹிந்தி.

ஏன்?

1 .குஜராத்தில்  மூன்று மாதமாய் இருக்கிறேன்,ஹிந்தி ஆதிக்கம் மிக மிக அதிகம்.சொந்த மொழியான குஜராத்தி வழக்கில் ரொம்ப குறைவு.
இதே நிலை தான் நம் தமிழுக்கும் ஏற்படும்.இந்த ஹிந்தி ஆட்கள்,ஆங்கிலம் தெரிந்தால் கூட,ஹிந்தி மட்டுமே பேசும் ஹிந்தி வெறி புடித்த ஆட்கள்.

2 . வேற்று மாநில மக்கள் எளிதாய் நம் மாநிலம் வந்து குடியேற ஒரு தடைக்கல்,நம்ம தமிழ்.தமிழுக்கு பயந்து இங்கு வராத ஆட்கள் மூலம் நமக்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.
மேலும், வரும் வெளி ஆட்களும் தமிழ் கற்று கொள்வதால் தமிழ் வளர்கிறது.

3 . அப்படியானால் வெளி மாநிலம் செல்லும் நம் ஆட்களின் நிலைமை?,உங்கள் சொந்த விசயமாய் நீங்கள் வெளி செல்வதால்,ஹிந்தி அறிந்து கொள்வது உங்கள் விருப்பம்/கடமை.
நீங்கள்/நான் வெளி மாநிலம் சென்று பிழைக்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வேண்டாமே.
உதாரணம் - என் நாமக்கல் மாவட்டம்,இங்கு முக்கியமான தொழில்,போர்வெல்(ஆழ்துளை கிணறு).இவர்களின் தொழில் இடமே வட மாநிலங்கள் தான்.
இவர்கள் அனைவரும் ஹிந்தி கற்று கொண்டு தான் சிறப்பாக  தொழில் செய்கின்றனர்.

4 . ஹிந்தி வழக்கில் வந்தால் தமிழ் புத்தகங்கள்,தமிழ் படங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.


5. இரு மொழி கொள்கை(தமிழ்,ஆங்கிலம்),நமக்கு ஆங்கில புலமை வளர உதவுகிறது.
ஹிந்தி வந்தால்,அதன் தாக்கம் அதிகமாக அதிகமாக அது ஆங்கிலத்தை பாதிக்கும்(குறிப்பாக கிராமப்புறங்களில்).



எனவே தோரயமாக, ஒரு 7 லட்சம் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ,ஏழு கோடி தமிழ் மக்களும் ஹிந்தி படிக்க தேவை இல்லை என்பது என் கருத்து.

இவை அனைத்தும் ,எனது பார்வையில் ஹிந்தி மொழி .உங்கள் கருத்துகளையும் பகிரலாம்.

--> ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க. 

Thursday, January 13, 2011

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான் - 1

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான்.

சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.
கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொள்ளவும்(கொல்லவும் அல்ல) .
இதோ வந்து விட்டது,மற்றுமொரு தொடர் பதிவு. பரோடாவில் ஒரு பட்டிகாட்டான். மேலும் ஒரு துயர செய்தி.சென்னை வந்தவுடன் "சென்னையில் ஒரு வெண்ணை" தொடரும்.
ஒரு ஆறுதல் செய்தி.வேலை முடிந்தால் தான் சென்னை.ஆனால் வேலை முடிய(?,! $) இன்னும் இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.



பரோடா என்பது குஜராத்தில் ஒரு ஊர்.பரோட்டா என்று படித்தவர்கள் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டியவர்கள்.
அதை இப்போது வடோதரா என்று மாற்றி விட்டார்கள்.எதுக்கு தான் ஊர் பேரை மாத்துராங்கனே தெரியல.
இங்க எனக்கு என்ன வேலை?,,வழக்கம் போல போட்டி போடற வேலை தான்.




பரோடா,உங்களுக்கு நினைவில் கொண்டு வர உதவுவது "Bank of Baroda", அதை ஏன் இன்னும் "Bank of Vadodara" என்று மாத்தல?,அதை மோடி கிட்ட தான் கேக்கணும்.அது யாரு மோடி?,
குஜராத் முதல்வர்,மீடியா மன்னர்,நரேந்திர மோடி.




பரோடாவில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3.மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4.புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5.24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

எனக்கு தெரிஞ்ச ஹிந்தி வார்த்தை, "துமாரா நாம் கியா ஹேய்?",,இந்த பிட்டை,இங்க கொளுத்தி விட்டேன்.
ஆனா எனக்கே அது ரிவிட் அடிச்சிருச்சு.
"துமாரா நாம் கியா ஹேய்" னு கேட்பது மரியாதை குறைவாம்."உன் பேர் என்ன?" மாதிரியாம்.
"ஆப்கோ நாம் கியா ஹேய்"னு தான் சொல்லனுமாம்."உங்க பேர் என்ன?"

அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .

நாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன்.
வருவேன்,தொடர்வேன்..அங்க குண்டு வெடிக்காமல் இருந்தால்.

வளரும் எழுத்தாளானுக்கு  ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.

Thursday, August 19, 2010

சென்னையில் ஒரு வெண்ணை

நம்மள எப்படி கிராமத்தான் னு கண்டுபிடிக்கறாங்கனே தெரியல?.


அதனால ஒரு ஆராய்ச்சியில் இருக்கேன்.என்ன ஆராய்ச்சி தெரியுமா?.ஏன் என்கிட்ட மட்டும் எந்த பொண்ணும் பேச மாட்டேங்கிதுன்னு .
இல்ல இல்ல ,பாக்கவே மாட்டேன்னு போகுதுன்னு.
நான் ஒன்னும் பாக்க ரொம்ப கொடுமையானவனும் கிடையாது. அப்புறம் ஏன்?.
என்ன விட மகா மட்டமான மடையன்கள் கூட மன்மதனா சுத்துறாங்க,ஆனா நான்- ஹ்ம் வேண்டாம்.
ஒரு பையன் ,முக்கியமா ஒரு பொண்ணும் நம்மள மதிக்கறதே இல்ல.

உண்மை அறிய,இதில் பலவித வெற்றி கண்ட வினோத் கண்ணனை நாடினேன்.
அவன் சொன்ன வழிமுறைகள்  எனக்கு வலி முறைகள் ஆகவே தெரியுது.என்ன செய்ய?,..கொஞ்சம்  முயன்று தான் பார்ப்போமே.

மாற்றம் - 1 ,முதல் கோணல் முற்றிலும் கோணல்.

டேய் என்னடா ஹேர் ஸ்டைல்  இது? 80 ல ஹிந்தி ஹீரோ வச்ச மாதிரி..change டா என்றான்.
எங்க ஊர்ல இப்படி  தண்டா  வெட்டுவாங்க.நான் என்ன பண்ண?,அதுவும் தலைக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சா நல்லதுன்னு பழகிட்டேன்டா.மாத்த முடியாதுடா.
போடா டுபுக்கு..மொதல்ல நான் சொல்ற மாதிரி செய்,அப்புறம் பாரு.

அவனே ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான்.கடை பேரு "கருப்பு-வெள்ளை".

கடைல ஒரு லிஸ்ட் படத்தை காட்டினாங்க,,உண்மைய சொல்லணும்னா ஒன்னு கூட நல்லாவே இல்ல.
எல்லாம் முடி வெட்டறப்ப பாதில ஓடி வந்தவனுங்க தலை மாதிரி இருந்துச்சு.

கடைசியா வேற வழியில்லாம "முள்ளம் பன்றி" யை செலக்ட் செஞ்சேன்.அது பேரு "spike". கொடும.
எங்க ஊரு ரவி பார்பர் இத பாத்தா,தொழிலையே விட்டுருவார்..அவ்வளவு மோசம்.


150 rs சார்,,ஐயோ,,நம்ம ஊருல ரெண்டு வருசத்துக்கே அவ்வளவு தானே..(10 *15 -150 ).ஆமா இப்படி குருவி கூடு மாதிரி நிக்குதே,எவ்வளவு நேரம் நிக்கும்,தலைக்கு குளிச்சா படுத்திறாது..
you should use hair gell da.

அப்ப தேங்கா எண்ணெய்?,ஊருல இருந்து ஆட்டி வந்தது இன்னும் அரை லிட்டர் இருக்கே?
அதை தூக்கி மொதல்ல வெளிய வீசு.
ஆமா,ஹேர் gell தெனமும் போடணுமா?
ஆமா ,daily two times .
அது எவ்ளோ விலை?.
என்ன,ஒரு fifty rs இருக்கும்.

ஐயோ,இப்ப புரிஞ்சு  போச்சு டா.
என்ன?
நம்ம சாப்ட்வேர் கம்பெனில எதுக்கு அதிகமா சம்பளம் தராங்கனு.
ஆமாடா,இதுக்கே தான்.

சரி,இன்னொரு சந்தேகம்,தலையில ஹெல்மெட் எப்படி போடுறது?
ஹெல்மெட் போட்டா hairstyle எப்படி தெரியும்.போடவே கூடாது.
இப்பவே தலை சுத்துதே.








தொடரும் ..


http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html#comments


Sunday, September 6, 2009

ஏர் இந்தியாவுல ஏன் யாரும் ஏறவில்லை

நேத்து தான் நியூஸ்ல பார்த்தேன் ..ஏர் இந்தியா விமானம் தீ பிடிச்சு  நின்னு போச்சாம்.அதுவும் நான் ரியாத்க்கு போன அதே விமானம். அப்பறம் எவன் ,எமனை தேட ஏர் இந்தியாவுல போவான்?

ரியாத்க்கு நானும் ஏர் இந்தியாவுல தான் போனேன்.பணம் என்னவோ  கம்மி தான் .ஆனா ?.
எல்லாருக்கும் ஒரு டிவி தனி தனியா இருந்துச்சு ,ஆனா முக்கால்வாசி டிவி ஓடவே இல்ல.
சர்வர் ப்ராபளம் என்ற மெசேஜ் மட்டும் தான் வந்துச்சு,படமும்  வரல பாட்டும் வரல. சரி விமான பணிப்பெண் கிட்ட சொல்லாம்னு பார்த்தா ,பணிப்பெண்க்கு பதிலா அவங்க அம்மா வருது .பாவம் இந்த வயசான காலத்தில அது என்ன பண்ணும் .அதான் ஒண்ணுமே பண்ணல.இறுதி வரை அந்த டிவி ஓடவா இல்ல.அந்த டிவி ல என்ன தான் ஓடுமோ என்ற கனவு ,நிராசை ஆகவே போச்சு .

நாலு பசங்க தான் எல்லா வேலையும் பாத்தாங்க.விமான பணிப்பெண் பற்றிய என் கற்பனைகள் எல்லாம் விபத்துல நொறுங்கி போன டாட்டா சுமோ போல் ஆச்சு.

ஆரம்பத்துல AC போடவே இல்ல.வேர்த்து கொட்டிடுச்சு..அப்பறம் டிவி ம் ஓடல ,பேப்பர் ம் ஹிந்தி,
பணிப்பெண் ம் ..வேணாம் ,அந்த துயர சம்பவத்தை நான் மறக்க முயற்சி செய்கிறேன்.
அதனால கொஞ்ச நேரம் கண்ணை மூடி கனவு கண்டிட்டு இருந்தேன்.
உடம்பு எல்லாம் கிடு,கிடு னு நடுங்குது.என்னடா இது ,இங்க வெயில் தானே பட்டய கிளப்பும் னு சொன்னாங்க னு பார்த்தா ?..வெளியுல மேகம் தான் தெரிஞ்சுது .உடனே HELP பட்டனை அழுத்தினேன் .ஆனா உடனே யாரும் வரவே இல்ல .உடனே மட்டும் இல்ல -கடைசி வரை ஒருத்தரும் வரல..
நடுங்கி கிட்டே போனேன்.

தொடரும்..




இது மட்டும் தானா ? இல்ல.

 இன்னும் இருக்கு..ஆனா இப்ப இல்ல ..!!
சென்னை'ல இருந்து ரியாத் போகவே நாலு மணி நேரம் தான் ஆகும் .ஆனா நம்ம  ஏர் இந்தியா குடுக்குது ஒரு அதி அற்புதுமான வழி(வலி ). ரியாத் --> டெல்லி --> மும்பை --> சென்னை ..வெளங்கிடும் ..
அந்த கடவுள் தான் என்னை  வரும் போது(நவம்பர் - 12) காப்பாத்தனும்.

12 ம் தேதி 10:45 க்கு கெளம்பி, அடுத்த நாள் காலை 3 மணிக்கு தான் சென்னை வரேன்.