Tuesday, July 10, 2012

ஹாலிவுட் ஸ்பெஷல் ஷோ - டாப் 10 சினிமா

டாப் 10 சினிமா என்ற சினிமா இதழில் ஹாலிவுட் ஸ்பெஷல் ஷோ என்ற பக்கத்தினை எழுதி வருகிறேன்.விரைவில் திரைக்கு வர இருக்கும் ஹாலிவுட் படங்களை பற்றிய முன்னோட்டம் தான் ஹாலிவுட் ஸ்பெஷல் ஷோ.டாப் 10 சினிமா-தமிழகம் முழுவதும் பிரபலமாகி வரும் ஒரு சினிமா இதழ்.மாதம் இருமுறை வெளிவருகிறது.வாங்கி படியுங்கள்.படித்து விட்டு,கண்டிப்பாக உங்கள் விமர்சனங்களை பதிவு செய்யவும்.நன்றி.

இங்கு உங்கள் பார்வைக்காக எனது முதல் இரண்டு படைப்புகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.விமர்சனங்கள் வரவேற்க்கபடுகின்றன.



Wednesday, May 30, 2012

கதம்பம் - ட்விட்டர் சண்டையும்,நானும்

பதிவுலகம் பற்றி:
2008ல்  இருந்து  பதிவுகளை  படித்து வருகிறேன்.2009 ல் இருந்து ஒரு 10 பதிவுகளை எழுதி இருப்பேன்.நிறைய பதிவுகளை எழுதவில்லையே,என் பதிவுகள் எல்லாம் புகழ் பெறவில்லையே என்றெல்லாம் எண்ணியது உண்டு.இப்போது நடக்கும் சண்டைகளை பார்க்கும் போது,கவலை எல்லாம் மறந்து மகிழ்ச்சி பொங்குகிறது.
எங்கே பிரபலம் என்றாலும்,பிரச்னையும் (பிற-சனியும்)  கூடவே வரும் போல . :)
பின் குறிப்பு - ரெண்டு பதிவர்களிடம் மட்டும் தொலைபேசியில் பேசி உள்ளேன்.இதுவரை எந்த பதிவுலக நிகழ்விலும் கலந்து கொண்டது கிடையாது.எந்த பதிவரையும் நேரில் சந்தித்தது கிடையாது.

திரைப்பட தாகம்:
நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து விட,திரைப்படமே கதி என்று நிலைமை ஆகி விட்டது.முன்பெல்லாம் மாதம் ஒரு படம் என்ற நிலைமை மாறி,வரம் ஒரு படம் என்றாகி விட்டது.
ராட்டினம் - வித்தியாசமான முடிவை தவிர வேற ஒண்ணும் கவரவில்லை.
கலகலப்பு-முதல் பாகம் பார்த்து விட்டு மூஞ்சியில ஈ ஆடலை,நல்லவேளை இரண்டாவது பாகம் காப்பாத்துச்சு.
வழக்கு எண் 18 /9 - ரொம்ப பிடிச்சிது,ரெண்டு முறை பார்த்தேன்.

சாகும் விவசாயம்:
நான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன்.எங்களது பாரம்பரிய தொழில் விவசாயம்.எனது தலைமுறையில் விவசாயம் செய்ய ஒருவரும் எனது சொந்தத்தில் இல்லை என்பதே உண்மை.இன்னும் இருபதே வருடங்களில் சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலை வரலாம்.மேலும் இப்போது விவசாயம் செய்வோரையும் பாதிக்கும் ஒரு மகா மட்டமான  திட்டம் "மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்" .


 நான்கு முடிந்தது,ஐந்து ஆரம்பமானது.

குவாலியன்(Qualian )  நிறுவனத்தில் சேர்ந்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது.ERP - Openbravo ERP ல் தான் ஐந்து வருட வேலையும்.இந்த உலகில் மிக குறைவான மக்கள் தான் தனக்கு பிடித்த வேலை செய்கின்றனர்.அதில் நானும் ஒருவன்.

Thursday, January 26, 2012

ஆப்பிரிக்காவை நோக்கி - என் சொந்த கதை

 ஆப்பிரிக்காவில் ஒரு ப்ராஜெக்ட்,மூணு மாசம்.அதற்கு நான் தான் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்கள்.எனக்கு முடிவு கட்டி விட்டார்கள் ..2012 ஆரம்பத்திலேயே ஒரு  அமோகமான நிகழ்வு.வெளியில் எல்லோரிடமும்  ஆப்ரிக்கா போறேன் என்று சொன்னாலும் உள்ளுக்குள் பீ(பே)தியில் இருப்பது என்னவோ உண்மை..why?..ஏன்?

 ஆப்பிரிக்காவில திருட்டு பசங்க ஜாஸ்தியாம்.இவனுங்க நம்ம ஊரு திருட்டு பசங்க மாதிரி கிடையாது.ஒரு டைப்பான ஆளுங்க.என்னை மாதிரி ஏதாவதுஒரு அப்பிராணி மாட்டுச்சுனா,இருக்குற எல்லாத்தையும் உருவிட்டு விட்டுடுவாங்க ,ஜட்டியை தவிர shoe,பேன்ட்,ஷர்ட்,watch  எல்லாம்.சில நேரத்தில ஜட்டியையும்,,ஹ்ம்ம் வேணாம்.அப்படி மாட்டிகிட்டா எப்படி திரும்பி ரூமுக்கு வர்றதனு  இதுவரைக்கும் விடை தெரியலை.இது பரவாயில்லை,போனா போகுது மானம்,அவமானம் எல்லாம் அப்படின்னு விட்டுடலாம்.சில நேரங்களில்,ஆளையே பரலோகத்துக்கு அனுப்பிடுவாங்களாம்.ஐயோ,இது முன்னாடியே தெரிஞ்சு இருந்தா, இன்னொரு LIC  பாலிசி போட்டு இருப்பேனே.





ஒரே ஒரு சந்தோசம்,நான் போறது சவுத் ஆப்ரிக்கா(south africa),பிரிடோரியா.நம்ம ஆளுங்க போய் கிரிக்கெட் ஆடுவாங்களே ஜோஹான்ஸ்பெர்க்,அது பக்கத்துல தான் இருக்காம்.இங்க கொஞ்சம் வெள்ளகாரனுங்க இருக்கறாங்க.ஆனா?அதுலயும் ஒரு சட்ட சிக்கல் இருக்குது.நிற வெறி பிரச்சனை.ஏதோ நான் ஆள் கருப்பா கலையா  இருக்கிறது நல்லதா போச்சு.எதுக்கும் தினமும் கொஞ்ச நேரம் வெயிலில் நின்னு,கருவண்டு மாதிரி ஆயிடனும்.அப்பதான் பிரச்சனையில்லை.ஆனா அவனுங்க மாதிரி கம்பிளி முடி எல்லாம் என்னால வக்க முடியாது.தலை பிச்சிக்கும்.அது பத்தாதுன்னு,"ஆப்ரிக்கா மண்டையா " னு பட்ட பேர் வேற வந்துடும். 





சரி விடுங்க, ஊராவது உடம்புக்கு நல்லதா இருந்தா சரி அப்படின்னு பாத்தா,அதுவும் கிடையாதாம்.மஞ்சள் காய்ச்சல்(yellow fever ) (மஞ்ச காமாலை இல்லை) அப்படின்னு ஒரு வியாதி.கொசு வழியா வருமாம்.இது வந்தா நம்மள பின்னி பெடல் எடுத்து பரலோகம் செல்ல வழி செய்யுமாம். இது வேறையா?நடக்கட்டும்.ஆப்பிரிக்கா பக்கம்  சில நாடுகளுக்கு போக,இந்த நோய்க்கு கட்டாயம் தடுப்பூசி போடணும்.

சென்னைல,கிண்டில,,கிங் இன்ஸ்டியுட்  னு ஒரு அரசு தடுப்பூசி மையம் இருக்கு.இங்க போய் தான் மஞ்ச காய்ச்சலுக்கு தடுப்பூசி  போடணும்.எல்லா வெள்ளிகிழமையும்  காலையில இங்க மஞ்ச காய்ச்சலுக்கு தடுப்பூசி போடுவாங்களாம்.காலையில எட்டு மணின்னு சொன்னாங்க.எதுக்கும் கொஞ்சம் முன்னாடியே இருக்கட்டுமேனு ஏலே முக்காலுக்கு போனா,ஒரு காட்டுக்குள்ள இன்ஸ்டியுட் .குத்து மதிப்பா எல்லா வழியும் சுத்தி போனா,ஒரு கட்டிடம் முன்னாடி கூட்டம்.அப்பவே ஒரு பதினஞ்சு பேரு உட்காந்து இருந்தாங்க.இவ்ளோ இடம் இங்க வேஸ்டா இருக்கு?பேசாம எல்லாத்தையும் ஒரு கட்டடம் ஆக்கிடலாம் அப்படின்னு ஒருத்தர் அறிவுரை சொல்லிக்கிட்டு இருந்தாரு.வெளங்கிடும்.அப்புறம்  மழை எல்லாம் எப்படி வரும்?.



ஒரு ஆள் நைசா என்கிட்டே வந்து, எனக்கு ஊசினா பயம்.காசு கொடுத்தா சர்டிபிகேட் குடுப்பாங்களா? என்றார்.நம்ம ஆளுங்களா திருந்தவே மாட்டாங்க.9:30  மணிக்கு தான் டோக்கன் தர ஆரம்பிச்சாங்க.ஆரம்பமே 11 வது டோக்கன் தான்.ஏன்னு கேட்டா?,இது அரசு அலுவலகம். எப்படியோ 10:30 மணிக்கு  ஊசி போட்டு மஞ்ச அட்டையில சீல் வச்சு குடுத்தாங்க.300 ரூபா ஊசிக்கு,ரசீது குடுத்தாங்க.ஒரு முக்கியமான விஷயம்,லஞ்சம் கேட்கவில்லை.

10 நாளைக்கு பிறகு தான் ஊசியின் பவர் தெரியுமாம்.லேசான காய்ச்சல் வந்தாலும் வருமாம்..10 நாளைக்கு பிறகு 10  வருசத்துக்கு என்னை மஞ்ச காய்ச்சலால அசைக்க முடியாது.போட்ட ஊசி நல்ல ஊசின்னு  நம்புடா திருமலை..