Thursday, November 12, 2009

அரசியல்வாதி


- குட்டி ( Published in யூத்ஃபுல் விகடன்)

நீ என் முதுகில் குத்தினாய்
நான் உன் நெஞ்சில் குத்தினேன்
நீ புரணி பேசினாய்
நான் மேடை போட்டு உன்னை உருக்குலைத்தேன்
நீ கூடவே இருந்து குழி பறித்தாய்
நான் உன்னை அதிலே போட்டு மூடிவிட்டேன்
நீ அரசியல் செய்தாய்
நான் அட்டூழியம் செய்தேன்
நீ என்னை பேடி என்றாய்
நான் இல்லை என நிரூபித்து காட்டினேன்
நீ குழைத்தாய்
நான் கடித்தேன்
நீ சொல்லால் அடித்தாய்
நான் கல்லால் அடித்தேன்
நீ என் உழைப்பை உரிந்தாய்
நான் உன் ரத்தத்தை உரிந்தேன்
நீ நியூட்டனின் இரண்டாம் விதியை மட்டும் உபயோகித்தாய்
நான் மூன்று விதிகளையும் சேர்த்து உபயோகித்தேன்

முள்செடி என்னை குத்தியது

வேரோடு அதை பிடுங்கி எறிந்தேன்
என்னாடா உலகம் இது
"எய்தவன் அங்கிருக்க அம்பை நொந்து கொள்கிறார்கள்"
ஆம், இந்த உலகுக்கு
நீ நல்லவனாம்
நான் கெட்டவனாம்
என்னை மன்னித்துவிடுங்கள் மக்களே!
இந்த சந்தர்ப்பவாத உலகில்
நானும் ஒரு சாமர்த்தியமான சந்தர்ப்பவாதிதான்
சத்தமில்லாமல் அரசியல்வாதியாக!
*

Sunday, November 8, 2009

இணைய தளத்தில் இலவசமாய் கிரிக்கெட் பார்க்க

இணைய தளத்தில் இலவசமாய் 'Cricket' பார்க்க இங்கே கிளிக்கவும்.
http://webcric.com/
http://www.crictime.com/server1.htm
http://www.crictime.com/server2.htm


சிறப்பம்சம்--

Linux லும் work ஆகும்.

தேவை;
Flash player


சில குறிப்புகள்:

1."Channel blocked by அட்மின்" என்ற செய்தி கிடைத்தால் ,வேறு server அல்லது வேறு streaming யை தேர்வு செய்யலாம்.
2.விளம்பரங்களை தவிர்க்க 'pop-up' களை blog பண்ணலாம்.
Firefox - https://addons.mozilla.org/en-US/firefox/addon/1788

3.விளம்பர flash களை தவிர்க்க firefox ல் இதை உபயோகப்படுத்தலாம்..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/433

குறிப்பு - "Flash blog "கிரிக்கெட் ஓடும் திரையையும் தடை செய்யும்.
அதை மட்டும் ஒரு முறை click செய்து ஓட விடலாம்.

Wednesday, November 4, 2009

ஹைக்கூ.. அரசியல்

பிறந்த குழந்தையின்
முதல் மழலை
அம்மாவாக இல்லை,
அப்பாவாக இல்லை,
அரசியலாக இருந்தது.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !

என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும் மண்ணாகி போனதே !
நடை பிணமாய் வாழ்ந்தென்ன ! மனங்கேட்டவர்களே !
ஐம்பதுக்கும் ஐந்னுருக்கும் இனத்தை அடமானம் வைத்தீர்களே !
பிரபாகரன் என்ன அவனது குடும்பத்தை வளர்த்தானா?
உன் இனத்துக்கும் மனிதாபிமானத்துக்கும போராடி பொறுமை காத்தான்!
மண்ணுக்கும் பொன்னுக்கும் போராடவில்லை !
உன் இன பெண்களுக்காக போராடினான்!
உன்னிடம் உயிர் பிச்சை கேட்டனா ?
தமிழினத்தின் மறு பிழைப்புக்கு பிச்சை கேட்டான் !
மாற்ற நாடுகள் உதவிட முன்வந்ததே ! நீ எங்கே சென்றாய் !
ஓ ! உனக்கு தான் உன் குடும்பத்தை கவனிக்க வேண்டுமே !
ராஜீவ் என்ற ஒரு உயிருக்கு பல ஆயிரம் உயிர்களா?
மானமுள்ள தமிழனே உயிர் உனதல்ல முன்னவர்கள் இல்லையேல்!
நன்றி கெட்ட மனிதா! நாட்டை அயல்நாட்டவனுக்கு அடமானம் வைத்தாயே!
காட்டி கொடுக்கும் கயவனை கையமர்த்தினாயே!
உயிர் கொடுத்த தமிழ் தாயை தத்து கொடுத்து, கொன்றாயே!
உனக்கும் சாவு மணி அடிக்கிறது, அறிவிலியே !
அயர்ந்து தூங்குகிராயோ! அழிந்து போனது உன் சந்ததி!
அழிவு நடக்கட்டும்! மானமுள்ளவர்கள் மரிக்கட்டும் !
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !
நீ உன் வேலையை பார் ! உனக்கு எதற்கு அயல் நாட்டு பிரச்சனை எல்லாம் !!

Sunday, November 1, 2009

பிழை கொண்ட(கண்ட) பயணம்!

தமிழகத்தின் ஒரு முக்கிய மத்திய சிறைச்சாலை. வாரத்தில் ஒரு முறை எச். . வி நோயாளிகளை சிறையில் சென்று பார்ப்பது எனது பணி, நான் ஒரு எச். . வி க்கான மருத்துவன். என்னை யாரோ பின்னால் அழைத்த குரல் கேட்க என் எக்ஸ்பிரஸ் வேகத்தை குறைத்து நின்றேன், எங்கோ பார்த்த முகம் போலிருக்க அவரே அறிமுகமானார் இந்த சிறையின் ஆண் செவிலியர் என்று. என் மறதிக்கு மன்னிப்பு கேட்டு கொண்டிருக்க சிறை மருத்துவரும் வந்து சேர்ந்தார். என்னுடைய கிளினிக்கிற்கு எச்..வி பாதிக்கப்பட்ட காவலர் ஒருவரை அனுப்புவதாகவும் அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மச்சினன் என்றும் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர். சொன்னபடி வந்தார் அந்த காவலர் அவருக்கு தேவையான மருந்துகளை எழுதி கொடுத்தேன், கூடுதலாக அவரது மனைவியிடம் மட்டும் விசயத்தை சொல்லுவது அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் வந்தால் பக்க பலமாய் இருக்கும் என்றேன். சில நாட்களில் திரும்ப நல்ல முன்னேற்றத்துடன் வந்தார் ஆனால் மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. திரும்பவும் ஆலோசனை வழங்க அவராகவே மனைவியிடம் விசயத்தை சொல்லி விட்டார் .
விஷயம் அவரது மச்சினனான உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரிய குடும்ப மானமே பெரிதென எங்கோ அடைத்து வைத்தனர். என்னிடம் செல் போனில் தொடர்பு கொண்ட அவரது மனைவி அவரை குண படுத்த வேண்டுமெனவும் அவரது ஓரின சேர்க்கை குணம் மாற வேண்டும் என்றும் கேட்டார். அவரது வாழ் நாள் பிரச்சனையே இல்லை மற்றவர்களை போலவே வாழ்வார் ஆனால் ஓரினச்சேர்க்கை குணத்தை முழுமையாய் மற்ற முடியாது என்றேன் , அவசரமாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சில நாட்களில் என்னை தேடி இரண்டு காவலர்கள் மபிட்டியில் வந்து அவருக்கான மருந்துகளை பெற்று சென்றனர்-உயர் அதிகாரியின் கைகூலிகள். நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் மனமாற்றத்திர்க்காக வெளியூரில் வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். சில வாரங்களில் நோயாளி மோசமான நிலையில் இருப்பதாக சிறை செவிலியர் சொல்ல, காரணம் அவரது குடும்பத்தார் அவரை சிகிச்சை எடுக்க என்னிடம் அனுமதிக்காமல் அடைத்து வைத்தது அம்பலமானது. விஷயமறிந்து வீறு கொண்டு எழுந்து போராட, உதவிக்கு மற்றொரு எச்..வி பாதிக்கப்பட்ட காவலர் வர எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் போலீஸ் அதிகாரியை அணுகினோம். போலீஸ் அதிகாரியின் குடும்ப விசயமரிந்ததும் கை விரித்தார் நான் என்ன செய்யமுடியுமென்று. மனம் தளரவில்லை நாங்கள், செவிலியரின் உதவியுடன் அந்த நோயாளியின் வீட்டை அடைந்தோம். தனி வீடு- மனிதர் வாழும் அடையாளம் இல்லாது இருந்தது, ஒரே ஒரு கட்டில் அதன் கீழே தண்ணீர் சொம்பு மயான அமைதி,என்னை எமன் போல குடும்பத்தார் பாவித்தனர்.என் அழைப்பிற்கு திரும்பி பார்த்துவிட்டு பேச சக்தியின்று கண் சொருகினார் என்னை பிழை கொண்ட நோயாளி. குற்றுயிருடன் முனகி கிடக்கும் மனிதனை சிகிச்சைக்கு சேருங்கள் அவர் பிழைப்பது உறுதி என்றேன்,இல்லையேல் நாளை செய்தித்தாளில் இந்த விசயத்தை வெளியிடுவேன் என்றேன்.அவர்களோ குடும்பத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறோம் என்றனர்.
திடீரென நியாபகம் வந்தது என் அண்ணனது கொளிந்தியால் திருமணம், இரண்டு நாள் விடுப்பில் என் ஊர் செல்ல மறந்து போனேன் நியாய அநியாயங்களை. வாரங்கள் கழிய எங்கோ இருந்து ஒரு மருத்துவர் என்னை அழைத்து அதே நோயாளியை பற்றி விசாரித்தார், மேலும் அவர் தங்களது மருத்துவமனையில் இருந்து discharge செய்த போது நோயாளி நலமுடன் இருந்தார் என்றார். சிறை செவிலியரை செல் பேசியில் அழைக்க, நான் எடுத்த திருமண விடுப்பில் நோயாளி அவரது கஷ்டங்களிலிருந்து விடுபட்டார் என்பதே கடைசி செய்தி.
இப்படிக்கு
மானங்கெட்ட மருத்துவன்

பயணி : சிறுகதை - குட்டி

        பயணி : சிறுகதை - குட்டி (Published in யூத்ஃபுல் விகடன்)
- குட்டி


ந்த மருத்துவனுக்கு பொழுதுபோக்கு ஊர் சுற்றுவது. சில நாட்களாய் பயணங்கள் இல்லாமல் சோம்பேறி ஆகியிருந்தான்.
நினைவலைகள் சுழல... தன்னுடைய கேரளத்து நண்பர்கள் நினைவில் வர, தொலைபேசி உரையாடலின் முடிவாய் கேரளத்து பயணம் ஆரம்பமானது.
ஓணம் பண்டிகையும் அந்த பயணத்திலேயே இணைந்தது.
மாலை வேளையில் மழை தூரலுடன் திரிச்சூரை அடைய, வரவேற்பு அமர்க்களப்பட்டது.
அன்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், இருமடங்கு விலையில் வாங்கப்பட்ட மதுவுடன் இரவு கேளிக்கை இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடந்தது.
வாடகை வீட்டில் பட்ட படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படிக்கும் அவர்களுக்கு வழக்கமான மெஸ், ஒணத்தால் விடுமுறையில் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த மதுவுடன் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரை கள்ளுகடையில் இரண்டு பாட்டில் கள் குடித்தனர்.
ஊர் சுற்றிவிட்டு நல்ல உறக்கம் கண்ட பயணிக்கு காலை விடிந்ததும் உறைத்தது வந்ததிலிருந்தே நண்பர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது.
ஓணத்துகாக விடுமுறை என்பதால் ஊர் சென்று விட்டனரோ என வினவ, மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு வீட்டில் படித்துகொண்டிருப்பது தெரிந்தது.
மாநிலம் தாண்டி வந்து படிக்கும் நண்பர்களை, மாநிலம் தாண்டி வந்து கெடுப்பது உறைத்தது.
நண்பர்களை நன்கு படிக்குமாறு கூறிவிட்டு ஊர் திரும்பினார்.
சில நாட்கள் கழிய டெல்லி நண்பன் நினைவு வர, தொலைபேசி உரையாடலுடன் டெல்லி பயணம் ஆரம்பமானது..!