Thursday, November 12, 2009

அரசியல்வாதி


- குட்டி ( Published in யூத்ஃபுல் விகடன்)

நீ என் முதுகில் குத்தினாய்
நான் உன் நெஞ்சில் குத்தினேன்
நீ புரணி பேசினாய்
நான் மேடை போட்டு உன்னை உருக்குலைத்தேன்
நீ கூடவே இருந்து குழி பறித்தாய்
நான் உன்னை அதிலே போட்டு மூடிவிட்டேன்
நீ அரசியல் செய்தாய்
நான் அட்டூழியம் செய்தேன்
நீ என்னை பேடி என்றாய்
நான் இல்லை என நிரூபித்து காட்டினேன்
நீ குழைத்தாய்
நான் கடித்தேன்
நீ சொல்லால் அடித்தாய்
நான் கல்லால் அடித்தேன்
நீ என் உழைப்பை உரிந்தாய்
நான் உன் ரத்தத்தை உரிந்தேன்
நீ நியூட்டனின் இரண்டாம் விதியை மட்டும் உபயோகித்தாய்
நான் மூன்று விதிகளையும் சேர்த்து உபயோகித்தேன்

முள்செடி என்னை குத்தியது

வேரோடு அதை பிடுங்கி எறிந்தேன்
என்னாடா உலகம் இது
"எய்தவன் அங்கிருக்க அம்பை நொந்து கொள்கிறார்கள்"
ஆம், இந்த உலகுக்கு
நீ நல்லவனாம்
நான் கெட்டவனாம்
என்னை மன்னித்துவிடுங்கள் மக்களே!
இந்த சந்தர்ப்பவாத உலகில்
நானும் ஒரு சாமர்த்தியமான சந்தர்ப்பவாதிதான்
சத்தமில்லாமல் அரசியல்வாதியாக!
*

1 comment:

  1. எல்லோருமே சந்தர்ப்பவாதிதான்...நல்லா இருக்கு

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.