வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி(தமிழகம் தவிர),நாம் சந்திக்கும் ஒரு சங்கடம் - ஹிந்தி.
ஹிந்தி தெரியாமல் பல இடங்களில் சந்தி சிரித்து,ஹிந்தி படித்து கொண்டிருக்கிறேன்.
இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா.? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தமிழன்.முன்பெல்லாம் சில விளக்கங்கள் சொல்வேன்,இப்போதெல்லாம் விளக்கமே கிடையாது.சிரித்து கொண்டே சென்று விடுவேன்.
இந்த விளக்கங்களை கேட்ட பிறகு,அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள்,கேட்கும் கேள்விகள் மகா எரிச்சல்.
1 . ஹிந்தி நம் தேசிய மொழி.அது தெரியாதுன்னு நீங்க சொல்றது ஆச்சிர்யமா இருக்கு.
2 . ஹிந்தி தெரியாமல் நீங்க இங்க வாழ முடியாது (அ) வாழ்றது கஷ்டம்.
3 . அப்போ உங்களுக்கு தமிழ் மட்டுமே போதுமா?
4 . ஹிந்தி கற்று கொள்வது ஒரு இந்தியனின் கடமை.
நிகழ்வு - 1.(சவுதி அரேபியா)
நான் - ஐ வான்ட் டு கோ டு exit-6 ,
பாகிஸ்தானி - கியா? ஹிந்தி மாலும்?
நான் - ஹிந்தி மபி மாலும்.
பாகிஸ்தானி - அரபி.
நான் - மபி.
பாகிஸ்தானி - உருது.
நான் - மபி.
பாகிஸ்தானி - கியா..? !@$@##&* @### !@#$$$ !@##
அவர் கண்டிப்பாக என்னை திட்டி விட்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் ஒரு சந்தோசம்.அவர் சொன்னது என்ன மொழி என்றே எனக்கு தெரியாது.
பிறகு தான் தெரிந்தது உருதும்,ஹிந்தியும் கொஞ்சம் சொந்தமாம்..ஹிந்தி தெரிந்தால் உருதுவை சமாளிக்கலாம் என்று ..
நிகழ்வு - 2.(துபாய்)
வழிப்போக்கன்1 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - எஸ்,
வழிப்போக்கன்1 - அச்சா,மே !@#$% !@#$$ ^*())@!!
நான் - மே ஹிந்தி நஹி மாலும்.
வழிப்போக்கன்1 - மதராசி ? !@#$% !@#$$ ^*())@!!
நிகழ்வு - 3.(துபாய்)( ஒரு மணி நேரத்திற்கு பிறகு )
வழிப்போக்கன்2 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - நோ, ஸ்ரீலங்கா - தமிழ் .
வழிப்போக்கன்2 -- ஒஹ் ,,,ஒகே..bye .
வெளி மாநிலங்களில்/நாடுகளில் நம் ஆட்களின் புலம்பல் இது தான்.
ஹிந்தி தெரியாம நாம் கஷ்ட படுறோம் .தமிழ் நாட்டில் ஹிந்தி வேண்டும் .ஹிந்தி வேண்டும்.ஹிந்தி வேண்டும்
சரி,அப்படினா இதுக்கு ஒரே தீர்வு,,பள்ளி பாடத்தில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.
தமிழ்நாடு எங்கள் நாடு,எனக்கு வேண்டாம் ஹிந்தி.
ஏன்?
1 .குஜராத்தில் மூன்று மாதமாய் இருக்கிறேன்,ஹிந்தி ஆதிக்கம் மிக மிக அதிகம்.சொந்த மொழியான குஜராத்தி வழக்கில் ரொம்ப குறைவு.
இதே நிலை தான் நம் தமிழுக்கும் ஏற்படும்.இந்த ஹிந்தி ஆட்கள்,ஆங்கிலம் தெரிந்தால் கூட,ஹிந்தி மட்டுமே பேசும் ஹிந்தி வெறி புடித்த ஆட்கள்.
2 . வேற்று மாநில மக்கள் எளிதாய் நம் மாநிலம் வந்து குடியேற ஒரு தடைக்கல்,நம்ம தமிழ்.தமிழுக்கு பயந்து இங்கு வராத ஆட்கள் மூலம் நமக்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.
மேலும், வரும் வெளி ஆட்களும் தமிழ் கற்று கொள்வதால் தமிழ் வளர்கிறது.
3 . அப்படியானால் வெளி மாநிலம் செல்லும் நம் ஆட்களின் நிலைமை?,உங்கள் சொந்த விசயமாய் நீங்கள் வெளி செல்வதால்,ஹிந்தி அறிந்து கொள்வது உங்கள் விருப்பம்/கடமை.
நீங்கள்/நான் வெளி மாநிலம் சென்று பிழைக்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வேண்டாமே.
உதாரணம் - என் நாமக்கல் மாவட்டம்,இங்கு முக்கியமான தொழில்,போர்வெல்(ஆழ்துளை கிணறு).இவர்களின் தொழில் இடமே வட மாநிலங்கள் தான்.
இவர்கள் அனைவரும் ஹிந்தி கற்று கொண்டு தான் சிறப்பாக தொழில் செய்கின்றனர்.
4 . ஹிந்தி வழக்கில் வந்தால் தமிழ் புத்தகங்கள்,தமிழ் படங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.
5. இரு மொழி கொள்கை(தமிழ்,ஆங்கிலம்),நமக்கு ஆங்கில புலமை வளர உதவுகிறது.
ஹிந்தி வந்தால்,அதன் தாக்கம் அதிகமாக அதிகமாக அது ஆங்கிலத்தை பாதிக்கும்(குறிப்பாக கிராமப்புறங்களில்).
எனவே தோரயமாக, ஒரு 7 லட்சம் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ,ஏழு கோடி தமிழ் மக்களும் ஹிந்தி படிக்க தேவை இல்லை என்பது என் கருத்து.
இவை அனைத்தும் ,எனது பார்வையில் ஹிந்தி மொழி .உங்கள் கருத்துகளையும் பகிரலாம்.
--> ஒரு உதவி.
கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10 vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.
சொல்றே பாயிண்ட் எல்லாம் சரி தான்... நீ இந்தியனா என்று வேறு நாட்டவர் கேட்கும் போது, இல்லை இல்லை இவர் "தமிழன்" என்று என்னை காட்டிக்கொடுக்கும் எனது நண்பர் பாகிஸ்தானியின் ஏளனத்தை சமாளிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டிதான் இருக்கிறது.
ReplyDelete/* ஆலோசனைகள்,கேட்கும் கேள்விகள் மகா எரிச்சல். */
ReplyDeleteஅந்த 4 ஆலோசனைகள், கேள்விகள்.
எனக்கும் இதே கொடுமைதான் கொல்கத்தால நடந்தது....
பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
ReplyDeletehttp://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html
My personal opinion:
ReplyDeleteHindi should be a compulsory subject till 10th along with tamil and tamil alone is mandatory till 12th.
The following names are speak and write Hindi very well but their family is very much against with hindi-Murasoli maran,Kalanidhi maran,Dayanidhi maran,Anbumani ramadoss,Udayanidhi stalin,Dayanidhi alagiri.
Because of political motive,those who born between 1960 - 1985 in tamilnadu especially doesnt know hindi.This scenario should change atleast now.
When i was in delhi i felt lot of problems without knowing hindi in all spheres of life.Being tamil as a classical lang is a mix of brahmi and sanskrit script.So no one cant change the grace of tamil language.
By learning the hindi till 10th has great adv and everyone can reconditioned with in short span of time whenever required.so Hindi should be a compulsory subject till 10th along with tamil and tamil alone is mandatory till 12th.
Thanks for ur gud article.All the best.Jaiho
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
ReplyDeleteஅச்சா.. ஏ துமாரா ப்ராப்ளம் ஹே.. பகுத் அச்சா..:))
ReplyDelete$#*^@#$&&$&#@$^%& - ஏதோ சொல்ல நினைக்கிறன்.. உங்களுக்கும் எனக்கும் (ஹிந்தி தெரியாதவர்க்கு மட்டும்) புரியும்னு நெனைக்கறேன்
ReplyDeleteஉங்களுடைய அனைத்துப் பாயிண்ட்டுகளும் ஏற்புடையனவே. இருந்தாலும் மிகச் சிறப்பானது அந்த மூண்றாவது பாயிண்ட்.
ReplyDelete//
ReplyDeleteஎனவே தோரயமாக, ஒரு 7 லட்சம் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ,ஏழு கோடி தமிழ் மக்களும் ஹிந்தி படிக்க தேவை இல்லை என்பது என் கருத்து.
மிகச்சரி.