நானும் காதலும் - காதலை பற்றி ஒரு காதலிக்காதவனின் கருத்து
காதல்,ஒரு அழகான சொல். காதல் செய்ய பணமோ,அழகோ,அறிவோ தேவை இல்லை.உண்மையை சொல்ல போனால், அறிவு சற்று கம்மியாக இருப்பது அதிக பலனை தரும்.காதலை நான் அனுபவித்தது இல்லை.அனுமானித்தது உண்டு.
எனக்கும் சில சமயங்களில் காதல் வரும்,உற்று நோக்கினால்(நோக்கினாள் அல்ல) அவை எல்லாம் உண்மையான காதல் அல்ல ,ஒரு affection (இனக்கவர்ச்சி) அவ்வளவு தான்.
ஏன்? காரணங்கள் எளிது,ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை பிடிக்கும் (அல்லது ) ஒரு மாதத்திற்கு ஒரு பெண்ணை பிடிக்கும்.பெண் தோழிகள் என்று எடுத்து கொண்டால்,ஒரு நான்கு வரலாம்.அதுவும்,மாதத்திற்கு ஒரு முறை பேசுவேன் அல்லது அதுவும் பேச மாட்டேன். இவர்கள் அனைவரும்,என்னை மிக நீண்ட நாட்களாய் தெரிந்து(வருட கணக்கில்) ,பின் தோழி ஆனவர்கள்.
நான் ஏன் இப்படி ஆனேன்? நான் ஆணாதிக்க வெறி பிடித்தவனா?. ஆம் - இல்லை
உயர்நிலை நாட்கள் - சிறு வயதில்,பள்ளி பருவத்தில் ஒரு பெண் மீது ஈர்ப்பு இருந்தது(வழக்கமான கதை தான் ). கதாநாயகன் வந்தான்,கதாநாயகியை கவர்ந்தான்,நான் வில்லன் ஆனேன்.அது தோற்று போனதில் காதலின் எதிரி ஆனேன்.படிப்பில் முதல் இடம் (அல்லது முதல் மூன்று இடங்களுக்குள்) மற்றும் துணைக்கு என் அப்பா நான் படித்த பள்ளியின் ஆசிரியர்.இது போதாதா காதலின் எதிரியாக???
மேல் நிலை நாட்கள் - மேல் நிலை படிப்பிற்காக விடுதிக்கு போனேன்.அது ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பள்ளி.பொண்ணுங்க,பசங்க பாக்க கூடாது,பேசக்கூடாது னு சொன்னங்க.அவங்க சொன்னதில்,நான் பின்பற்றிய ஒரே கருத்து இது தான். பேச்சு போட்டியில் (http://enathupayanangal.blogspot.com/2009/10/blog-post.html ),பள்ளி எங்கும் என் புகழ் பரவி,மேலும் சில பல சித்து வேலைகள் செய்து,கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, படிப்பை மறந்து திரிந்த காலம்.இந்த காலங்களில் நான் இரண்டு பெண்களிடம் பேசி இருக்கிறேன். பேசியது இது தான்.உங்க ரெகார்ட் நோட் குடுங்க,மிஸ் மார்க்கை கூட்டி சரி பார்க்க சொன்னாங்க..அதற்கு மேல்,எதுவும் நியாபகம் இல்லை.
நான் பெரும்பாலும்,என் நெருங்கிய நண்பர்கள் உட்பட,வாங்க-போங்க என்று தான் கூப்பிடுவேன்.இதை பலரும் விரும்புவது கிடையாது.
இதனால் கல்லூரியில் என் காதல் "லேது,நகி ,இல்லை,மபி".
வேலை நாட்கள் -
ஒரு பெண் அதியசம் ஆக chat ல் வந்தது ,ஸ்கூல் பிரண்ட் என்றது.
அடுத்த நாள் காலை,"hi da " என்றது,நான் உடனே,"hi di " என்றேன்.அவ்வளவு தான் ,என்னை பிளாக் பண்ணிவிட்டது(block தான் ,blog அல்ல) .
நண்பனிடம்,கேட்டால்,ஐயோ,இதெல்லாம் பன்னப்பிடாது என்றான்.
இதை எல்லாம் படித்து விட்டு,ஒரு பேக்கு,சோடாபுட்டி கண்ணாடி,படிந்த எண்ணெய் போட்டு வாரிய தலை,தொள தொள சட்டை,பேண்ட் என்று உருவம் செய்தால் ,அது தான் நான் - க. திருமலை. பாஸ்போர்ட்,விசா ,கிரெடிட் கார்டு,பான் கார்டு,லைசென்ஸ் என்று எல்லாவற்றிலும் தன் தமிழ் பெயரை முழுதாய் எழுதி, கையெழுத்து என்று சொல்லி,பலரை அலற (அழ) வைத்தவன்.
நான் காதல் வயப்படா காரணம்,
1 . பெண்களை மதிக்காமல் ,அதிகமாய் நக்கல் செய்வது.அதிகமான பேச்சு.
2 . பெண்களிடம் ம்,ம் என்று அரை மணி நேரம் சொல்ல ,பொறுமை இல்லாமை. சாப்டியா?,தூங்கினியா? என்றெல்லாம் சொல்லாதது.
3 . வாங்க,போங்க என்று நான் சொல்லுவதால்,நான் சின்னப்பையனாக ஆகி ,அவர்கள் அக்கா ஆவதாக எண்ணி அரண்டு போய் ஓடிப்போனது.
4 . ஜாதி பிரச்சனை - நான் பாட்டுக்கு,கல்யாணம் பண்ணி கொண்டு போனால் ,கிராமத்தில் இருக்கும் என் பெற்றோரை நேரடியாய் பாதிக்கும் என்று எண்ணியது.முக்கியமாய் ரெண்டு பக்கமும் அடி பின்னிடுவாங்க என்ற பயம்.
5 . ஹீரோ என்று எண்ணி பல செயல்கள் செய்து காமெடியன் ஆனது.
6 . சம வயது பெண்களிடம் பழக அதிக வாய்ப்பு இல்லாமை.அக்கா,தங்கை இல்லாமை.வீட்டில் ஒரே பையன்-தனிக்காட்டு ராஜா எல்லாம் கிடையாது.
எங்கம்மாவிடம் - தினமும் அடி வாங்குவேன் சிறுசாய்,
அப்பாவிடம் - எப்பவாவது வாங்குவேன் பெருசாய் .
இப்படி எல்லாம் நான் காரணங்கள் சொன்னாலும்,உண்மை இது தான்.
எனக்கு காதலிக்க வாய்ப்பு வரவில்லை.வாய்ப்புகளை உருவாக்க தெரியவில்லை.
காதலிப்பவர்கள் காதலில் வெற்றி அடைய என் வாழ்த்துக்கள்.
நன்றி (love image )- http://www.nkdreams.com/poems/?p=21
காதலித்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
ReplyDelete:) கொஞ்ச நாள் பொறு தலைவா... ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா... காதலைக் கற்றுத் தருவா.
ReplyDeleteவாழ்த்துக்கள் :) :)
@ middleclassmadhavi காதலித்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்!
ReplyDelete-->அய்யய்யோ ! ஆளை விடுங்க சாமி.
@ சிவாஜி :) கொஞ்ச நாள் பொறு தலைவா... ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா... காதலைக் கற்றுத் தருவா.
வாழ்த்துக்கள் :) :)
-->வேணாம் பாஸ்,அழுதிருவேன்
Hi Thirumalali,
ReplyDeleteI do not have Tamil font, please bear with me. Your article is really good. Funny at the same time. Keep up the good work !
Best Regards
Vadivelan.S
நல்ல அருமையான கட்டுரை, சொந்த அனுபவமான்னு தெரியல. ஆனா ரொம்ப யதார்த்தமா இருக்கு, வாழ்த்துக்கள்!
ReplyDeletehey KT,
ReplyDeleteDont rush into falling in love.Love never runs out..i think "God just busy writing d best love story for u" ...
@@பன்னிக்குட்டி ராம்சாமி
ReplyDeleteஅண்ணே,எல்லாம் சொந்த அனுபவம்னே !!!
@@ Mass
அனுபவம் உள்ளவங்க சொன்னா சரியாய் தான் இருக்கும் .
super KT
ReplyDeleteநல்லா இருக்குங்க.
ReplyDelete>>>>
ReplyDeleteஎனக்கும் சில சமயங்களில் காதல் வரும்,உற்று நோக்கினால்(நோக்கினாள் அல்ல)
ஹாஸ்யம்,..!!
>>>அடுத்த நாள் காலை,"hi da " என்றது,நான் உடனே,"hi di " என்றேன்.அவ்வளவு தான் ,என்னை பிளாக் பண்ணிவிட்டது(block தான் ,blog அல்ல) .
ReplyDeleteடிட் ஃபார் டாட்.. நீங்க செஞ்சது சரிதான்
பட் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
ReplyDeleteயதார்த்தமான பதிவு...வாழ்த்துக்கள்
ReplyDeleteHey coool! Thirumalai.....gr8 ....அது தான் நான் - க. திருமலை. பாஸ்போர்ட்,விசா ,கிரெடிட் கார்டு,பான் கார்டு,லைசென்ஸ் என்று எல்லாவற்றிலும் தன் தமிழ் பெயரை முழுதாய் எழுதி, கையெழுத்து என்று சொல்லி,பலரை அலற (அழ) வைத்தவன். ---- lines are wonderfull. sorry for this late comment - Niranjana
ReplyDeleteதிருமணதிற்கு முன் காதலிக்காதவர்கள், திருமணத்திற்கு பின் நிறைய காதலிப்பார்கள்ன்னு(பொண்டாட்டியைதான்) சொல்லுவார்கள்.. (இல்லேயினா நாமே அப்படி சொல்லிக்கணும்).. என் கதையை படித்து போல இருந்தது.. என் மனதில் காதல் உணர்ந்த பொழுது எழுதியதை நேரம் இருந்தால் பாருங்கள்..
ReplyDeletehttp://suthershan.blogspot.com/2010/09/blog-post_9367.html
http://suthershan.blogspot.com/2010/10/blog-post_03.html