Thursday, January 13, 2011

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான் - 1

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான்.

சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.
கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொள்ளவும்(கொல்லவும் அல்ல) .
இதோ வந்து விட்டது,மற்றுமொரு தொடர் பதிவு. பரோடாவில் ஒரு பட்டிகாட்டான். மேலும் ஒரு துயர செய்தி.சென்னை வந்தவுடன் "சென்னையில் ஒரு வெண்ணை" தொடரும்.
ஒரு ஆறுதல் செய்தி.வேலை முடிந்தால் தான் சென்னை.ஆனால் வேலை முடிய(?,! $) இன்னும் இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.



பரோடா என்பது குஜராத்தில் ஒரு ஊர்.பரோட்டா என்று படித்தவர்கள் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டியவர்கள்.
அதை இப்போது வடோதரா என்று மாற்றி விட்டார்கள்.எதுக்கு தான் ஊர் பேரை மாத்துராங்கனே தெரியல.
இங்க எனக்கு என்ன வேலை?,,வழக்கம் போல போட்டி போடற வேலை தான்.




பரோடா,உங்களுக்கு நினைவில் கொண்டு வர உதவுவது "Bank of Baroda", அதை ஏன் இன்னும் "Bank of Vadodara" என்று மாத்தல?,அதை மோடி கிட்ட தான் கேக்கணும்.அது யாரு மோடி?,
குஜராத் முதல்வர்,மீடியா மன்னர்,நரேந்திர மோடி.




பரோடாவில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3.மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4.புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5.24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

எனக்கு தெரிஞ்ச ஹிந்தி வார்த்தை, "துமாரா நாம் கியா ஹேய்?",,இந்த பிட்டை,இங்க கொளுத்தி விட்டேன்.
ஆனா எனக்கே அது ரிவிட் அடிச்சிருச்சு.
"துமாரா நாம் கியா ஹேய்" னு கேட்பது மரியாதை குறைவாம்."உன் பேர் என்ன?" மாதிரியாம்.
"ஆப்கோ நாம் கியா ஹேய்"னு தான் சொல்லனுமாம்."உங்க பேர் என்ன?"

அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .

நாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன்.
வருவேன்,தொடர்வேன்..அங்க குண்டு வெடிக்காமல் இருந்தால்.

வளரும் எழுத்தாளானுக்கு  ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.

16 comments:

  1. 1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.///


    பாத்துய்யா கும்மிட போறானுக.....

    ReplyDelete
  2. //சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
    என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.//

    பாஸ்..அடுத்தவங்க சொன்னதுக்கெல்லாம் கவலப்படாதீங்க பாஸ்...

    //அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
    ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .///

    ஆமாம் பாஸ்...அவங்க நல்லா இருக்கட்டும்....எங்கப்பாவும் governmant school வாத்தியார் தாங்கோ....

    ReplyDelete
  3. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.

    dialoguea lastla maathiteengla boss.good twist

    ReplyDelete
  4. //பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
    2.பாக்கு போடும் ஆட்கள்.


    ஒருவேளை பாக்கு போடுறதுனாலத்தான் இந்த குழப்பமா?

    ReplyDelete
  5. "துமாரா நாம் கியா ஹேய்?............................................////////////////////////////////////////////

    எனக்கு இன்னொரு வார்த்தையும் தெரியும் .... இதர் ஆவோ .............

    ReplyDelete
  6. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க//
    குழந்தைகளா...

    ReplyDelete
  7. அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.//
    புரியல

    ReplyDelete
  8. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.//
    ஆச்சர்யம் ..காந்தி பிறந்த குஜராத்ல மனுசக்கறி தவிர எல்லாத்தையும் திங்கிறானுக...அங்க அவங்க ஏன் அப்படி ஆராய்ச்சி பண்ணி பதிவு போடவும்

    ReplyDelete
  9. 80 % மக்கள் சைவம்,,கறி சாப்பிட மாட்டாங்க .

    Compressed natural gas (CNG) is a fossil fuel substitute for gasoline (petrol), diesel, or propane/LPG.

    ReplyDelete
  10. குஜராத்தை சுற்றி காட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  11. நல்லா எழுதி இருக்கீங்க..
    நீங்க குஜராத்தைப் பத்தி சொன்னதுலாம் நூறு சதவிகிதம் உண்மை.
    நா அகமதாபாத்-காந்திநகர்ல 12 வருசம் இருந்தேன்.. இப்ப ஐ ஆம் மிஸ்ஸிங் குஜராத் வெரி மச்..

    குஜராத்தில்(பரோடாவில் மட்டுமல்ல..) எனக்கு பிடித்தது..

    * நீங்கள் சொல்லிய 5 முதல் 5 வரை, எல்லாமே..

    பிடிக்காதது :

    * நீங்கள் சொல்லிய 2 மட்டுமே. நா, ரெண்டு வருஷத்துல ஹிந்தி கத்துக் கிட்டதால பிராப்ளம் சால்வ்ட்.

    குஜராத் முன்னேறுதா ?

    * இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே இருங்க.. அதுக்குள்ள குஜராத் எட்டாத ஒசரத்துக்கு போயிடும் அப்பு.. நெசமாத்தான், சொல்லுறேன்.

    // நாளை இங்கநாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன். //

    ஐ மிஸ் திஸ் டூ, வெரி மச்.. பதங் உட்னா ஆத்தா ஹி, க்யா ? மஜா ஆத்தா ஹேய்.

    //கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
    10 vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க. //
    நல்ல விஷயத்தப் பத்தி சொன்னா ஒட்டு போடாமலா இருப்போம்.. போட்டாச்சு.. ஆனா அதெதுக்கு ரெண்டு தடவை 'இன்ட்லி' ஓட்டுப் பட்டை..?

    Greetings !

    ReplyDelete
  12. சென்னையில் ஒரு வெண்ணை, பரோடாவில் ஒரு பட்டிக்காட்டான் என்று நீங்கள் வைக்கும் தலைப்புகளில் கிரியேட்டிவிட்டி அருமையாக இருக்கிறது... அடிக்கடி பதிவு எழுதினால் தான் என்னவாம்...?

    ReplyDelete
  13. பாஸு .. நல்லா இருக்கு .. குஜராத் சாரி, வடோதரா பற்றி நாங்களும் தெரிஞ்சிக்குவோம்..
    //மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.//
    சூப்பர் ...

    Cheers !!!

    ReplyDelete
  14. பரொடா நல்ல ஊர் தான்..உங்கள் கை வண்ணத்தில் அது மேலும் மெருகேறுகிறது!!

    ReplyDelete
  15. நான் ஹைதராபாத்தை ரொம்ப மிஸ் பண்ணறேன்..

    ReplyDelete
  16. இன்ட்லி லைக் பட்டன் சரியா வேலை செய்யவில்லை - ரெண்டு மூணு தரம் ட்ரை பண்ணி பார்த்து விட்டேன். கவனிக்கவும்.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.