Thursday, August 19, 2010

சென்னையில் ஒரு வெண்ணை

நம்மள எப்படி கிராமத்தான் னு கண்டுபிடிக்கறாங்கனே தெரியல?.


அதனால ஒரு ஆராய்ச்சியில் இருக்கேன்.என்ன ஆராய்ச்சி தெரியுமா?.ஏன் என்கிட்ட மட்டும் எந்த பொண்ணும் பேச மாட்டேங்கிதுன்னு .
இல்ல இல்ல ,பாக்கவே மாட்டேன்னு போகுதுன்னு.
நான் ஒன்னும் பாக்க ரொம்ப கொடுமையானவனும் கிடையாது. அப்புறம் ஏன்?.
என்ன விட மகா மட்டமான மடையன்கள் கூட மன்மதனா சுத்துறாங்க,ஆனா நான்- ஹ்ம் வேண்டாம்.
ஒரு பையன் ,முக்கியமா ஒரு பொண்ணும் நம்மள மதிக்கறதே இல்ல.

உண்மை அறிய,இதில் பலவித வெற்றி கண்ட வினோத் கண்ணனை நாடினேன்.
அவன் சொன்ன வழிமுறைகள்  எனக்கு வலி முறைகள் ஆகவே தெரியுது.என்ன செய்ய?,..கொஞ்சம்  முயன்று தான் பார்ப்போமே.

மாற்றம் - 1 ,முதல் கோணல் முற்றிலும் கோணல்.

டேய் என்னடா ஹேர் ஸ்டைல்  இது? 80 ல ஹிந்தி ஹீரோ வச்ச மாதிரி..change டா என்றான்.
எங்க ஊர்ல இப்படி  தண்டா  வெட்டுவாங்க.நான் என்ன பண்ண?,அதுவும் தலைக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சா நல்லதுன்னு பழகிட்டேன்டா.மாத்த முடியாதுடா.
போடா டுபுக்கு..மொதல்ல நான் சொல்ற மாதிரி செய்,அப்புறம் பாரு.

அவனே ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான்.கடை பேரு "கருப்பு-வெள்ளை".

கடைல ஒரு லிஸ்ட் படத்தை காட்டினாங்க,,உண்மைய சொல்லணும்னா ஒன்னு கூட நல்லாவே இல்ல.
எல்லாம் முடி வெட்டறப்ப பாதில ஓடி வந்தவனுங்க தலை மாதிரி இருந்துச்சு.

கடைசியா வேற வழியில்லாம "முள்ளம் பன்றி" யை செலக்ட் செஞ்சேன்.அது பேரு "spike". கொடும.
எங்க ஊரு ரவி பார்பர் இத பாத்தா,தொழிலையே விட்டுருவார்..அவ்வளவு மோசம்.


150 rs சார்,,ஐயோ,,நம்ம ஊருல ரெண்டு வருசத்துக்கே அவ்வளவு தானே..(10 *15 -150 ).ஆமா இப்படி குருவி கூடு மாதிரி நிக்குதே,எவ்வளவு நேரம் நிக்கும்,தலைக்கு குளிச்சா படுத்திறாது..
you should use hair gell da.

அப்ப தேங்கா எண்ணெய்?,ஊருல இருந்து ஆட்டி வந்தது இன்னும் அரை லிட்டர் இருக்கே?
அதை தூக்கி மொதல்ல வெளிய வீசு.
ஆமா,ஹேர் gell தெனமும் போடணுமா?
ஆமா ,daily two times .
அது எவ்ளோ விலை?.
என்ன,ஒரு fifty rs இருக்கும்.

ஐயோ,இப்ப புரிஞ்சு  போச்சு டா.
என்ன?
நம்ம சாப்ட்வேர் கம்பெனில எதுக்கு அதிகமா சம்பளம் தராங்கனு.
ஆமாடா,இதுக்கே தான்.

சரி,இன்னொரு சந்தேகம்,தலையில ஹெல்மெட் எப்படி போடுறது?
ஹெல்மெட் போட்டா hairstyle எப்படி தெரியும்.போடவே கூடாது.
இப்பவே தலை சுத்துதே.








தொடரும் ..


http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html#comments


16 comments:

  1. நண்பரே கலக்கல்...

    பொண்ணுங்க பாக்கணுமுன்னா ரொம்ப சிம்பிள் வாத்தியாரே... துணிய கிழிச்சுகிட்டு நடையுங்க.. அப்புறம் பாருங்க பொண்ணு என்ன ஊரே பாக்கும்...

    ReplyDelete
  2. Hi Thirumalai this is DHAMU G [ECE]

    Really super da

    ReplyDelete
  3. ஒரு ஆராய்ச்சியில் இருக்கேன்.என்ன ஆராய்ச்சி தெரியுமா?.ஏன் என்கிட்ட மட்டும் எந்த பொண்ணும் பேச மாட்டேங்கிதுன்னு .
    இல்ல இல்ல ,பாக்கவே மாட்டேன்னு

    athoda resulta patti solavae illaiyae.

    ReplyDelete
  4. Mr.Senthil,,Story will continue
    தொடரும் ..

    ReplyDelete
  5. டேய் எங்க தாத்தா கூட நாங்களே போட்டோ எடுத்தது இல்ல.. நீ எப்படா ராசா எடுத்த..இப்ப தெரியுது ஊர்ல நடக்கறது எப்படி BBC நியூஸ் மாதிரி உனக்கு மட்டும் தெரியுதுன்னு...Keep it up...

    ReplyDelete
  6. @jayakumar palanisamy

    Ok boss,,atha vidunga,,Kathai eppadi..

    ReplyDelete
  7. சாமீ... இதுல ஆராய்ச்சி என்ன வேண்டியிருக்கு... தலையைச் சுத்தி மூக்கத் தொடற கதை தான் இது... தைரியம் இருந்தா நேராவே தொடலாம்... ம்ம்... கடைசில தொட்டுட்டாச் சரி... வாழ்த்துக்கள்... நடத்துங்க.

    ReplyDelete
  8. இப்பிடீல்லாம கிளம்பி இருக்கிங்க

    ReplyDelete
  9. Mr.Thirumalai, இது கதையல்ல...நிஜம்ங்கறது..எனக்கு தெரியும். எழுத்து நல்லா இருக்கு.

    ReplyDelete
  10. Nice One, We need copyright royalty for Thatha photo :)

    Your narration, writing proves again that you are from great teacher's family. keep it up

    ReplyDelete
  11. இப்படி ஊர் பெரிய மனுஷன் கூட போட்டோ எடுத்து மானத்த வாங்குவனு அவருக்கு தெரிஞ்சி இருந்தா உன்கூட போஸே கொடுத்திருக்க மாட்டார்... என்ன ஜெயகுமார் பாஸ் இதெல்லாம் கேக்கறது இல்லையா????

    ReplyDelete
  12. அருமையான நடை.
    இதோ பாரதி கண்டெடுத்த எதிர்கால எழுத்தாளன். என்னுடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஹி.. ஹி.. செம..
    சார் நல்லா வருது.. தொடருங்கள்..

    ReplyDelete
  14. //~~ முகவதி ~~ said...
    இப்படி ஊர் பெரிய மனுஷன் கூட போட்டோ எடுத்து மானத்த வாங்குவனு அவருக்கு தெரிஞ்சி இருந்தா உன்கூட போஸே கொடுத்திருக்க மாட்டார்... என்ன ஜெயகுமார் பாஸ் இதெல்லாம் கேக்கறது இல்லையா???? //

    Ha ha

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.