யானைக்கு தேவை தும்பிக்கை,நமக்கு தேவை நம்பிக்கை.
பதிவு எழுதும் முன் பதிவர்களின் பட்டியலை பார்த்து பயந்து,நடுங்கி விட்டேன்.தொடர்கதையாக இந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது.ஒரு துறையையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை .
நகைச்சுவை ,காதல்,கவிதை ,சிறுகதை,அரசியல் மற்றும் சினிமா(இடம் பத்தாது ). இதை எல்லாம் தாண்டி இதன் கிளை பிரிவுகளுக்கு கூட சென்று விட்டனர்.உதாரணம் -- ஹாலிவுட் பாலா(ஹாலிவுட் விமர்சனம் ), மென்பொருள் (pkp).
இது போதாது என்று பெரும் தலைகள் கூட பதிவு எழுத வந்து விட்டன. உதாரணம் --> http://jeyamohan.in/ , http://gnani.net/ , http://www.sramakrishnan.com/
இத்தனைக்கும் நடுவுல நான் பதிவு எழுதி ,அதையும் நாலு பேரு படிச்சுட்டாங்க..
கடந்த காலம்- (அதாங்க Flash back )
நாலு மாசத்துக்கு முன்னாடி பதிவு எழுதலாம்னு நெனச்சப்ப ,கபால்னு வந்துச்சு ஒரு யோசனை.
யோசனைகளும் வேதனைகளும்
யோசனை - 1
மெகா சீரியல் - தொடர் நாடகம் - விமர்சனம்
ஆகா ,அற்புதம்.எப்படியும் இந்த தொடர்கள் எல்லாம் முடியபோறதே இல்ல .பெண்களின் பெரும்பான்மையான ஆதரவும் கிடைக்கும் .அப்புறம் என்ன னு நினைச்சு என் நண்பன்ட்ட ஆலோசனை கேட்க போன் போட்டேன் .மணி அப்போ ,இரவு 9.
அவனே அப்பதான் அவங்க அம்மா கூட சண்ட போட்டு கிரிக்கெட் பாக்க முயற்சி பண்ணி ,எதிர் கட்சியுல இவன் தங்கச்சியும் சேர்ந்துட ..நொந்து போய் விதி எண்ணி வீதி டிவி ல கிரிக்கெட் பார்த்துட்டு இருந்திருப்பான் போல..காரி துப்பிட்டான்.
ஐயயோ ,இதுக்கு பின்னாடி இவ்ளோ பிரச்சனையா னு பயந்து இந்த யோசனைய கிடப்புல போட்டேன் .
நல்ல வேலை,முன்னாடியே உண்மை தெரிஞ்சதால தப்பிச்சேன்.
பல ஆண்கள் இதனால் நொந்து போய்,டாஸ்மாக் போறாங்கலாம்.ஒரு சங்கமே(சீரியல் எதிர்ப்பு ) இருக்கு போல ?.தப்பி பிழைத்தேன்..
தொடரும் ....
அடுத்த யோசனை ..(யோசனை - 2,நாய்,பூனை வளர்ப்பது எப்படி? )
யாரும் படிக்காமல் போனாலும் ,எவரும் பின்னூட்டம் இடா விட்டால் கூட தொடர்ந்து எழுதுவேன்.
ReplyDeleteயாரும் தப்பிக்க முடியாது.
என்ன இப்பிடி சொல்லிட்டீங்க தல? நிறைய பேர் படிச்சிகிட்டுதான் இருக்காங்க. சில பேர் மட்டும்தான் ரிப்ளை பண்ணுவாங்க. அதுல 1%தான் ஓட்டு போடுவாங்க.
ReplyDeleteநானெல்லாம் 18+-ன்னு எழுதினாதான் கூட்டமே வரும். அதனால.. தைரியமா எழுதிகிட்டே இருங்க. உங்களுக்குன்னு ரசிகர் கூட்டம் வந்துடும்.
டவுட்ட்னா.. என்னோட.. முதல் பதிவுக்கு வந்த பின்னூட்டத்தை பாருங்க.
ஜனவரி 14-ல் எழுதி, அடுத்தப் பதிவை கேபிள் சங்கர் ரெஃபர் பண்ணின பின்னாடிதான் ஆளுங்களே.. ஏரியாவுக்கு வந்தாங்க.
ஸோ... டோண்ட் வொர்ரி!!! Option-la போய்.. இந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விட்டுடுங்க தல.
இதை பார்த்தாலே.. யாரும் பின்னூட்டம் போட மாட்டாங்க! :)
நானும் உங்களை மாதிரி தாங்க. ”குறிபிடுற” அளவுக்கெல்லாம் இன்னும் வரலை!!! அப்பிடி.. இப்பிடின்னு காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்! :) :)
வாழ்த்துகள்! :) :)
தல.. கூடவே... Archives gadget -ஐ சேர்த்துடுங்க. Label மட்டும்தான் இருக்கு!
ReplyDeleteநன்றி பாலா,தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்.
ReplyDeleteஉங்களின் அறிவுரைகள் செயல்படுத்தப்பட்டன.
நன்றி.
அப்படியா? .நீங்க நல்ல எழுதுறிங்க .நல்ல கருத்துக்களுடன்
நானும் cablear பதிவு வழியாகவே வந்தேன்.
நான் ஒரு time pass எழுத்தாளன்(சும்மா Joke) தான். இன்னும் வயசு இருக்கு.
கொஞ்சம் ,கொஞ்சமா,முன்னேறலாம்..
///நான் ஒரு time pass எழுத்தாளன்(சும்மா Joke) தான். இன்னும் வயசு இருக்கு.///
ReplyDeleteஅடடே.. குட்.. குட்.!! நானும் இப்படி சொல்லிதான் ஆரம்பிச்சேன்! :) :)
வாங்க. வந்து.. ஜோதியில ஐக்கியமாய்டுங்க... டைம் பாஸ் எழுத்தாளரே! :) :) :)
ஐக்கியம் ஆயிட்டா போச்சு..
ReplyDeleteதொடர்ந்து நல் ஆதரவை வழங்கி வரும் அண்ணன் "பாலா" அவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றிகளை உரித்தாக்குகிறோம்.