Thursday, January 13, 2011

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான் - 1

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான்.

சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.
கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொள்ளவும்(கொல்லவும் அல்ல) .
இதோ வந்து விட்டது,மற்றுமொரு தொடர் பதிவு. பரோடாவில் ஒரு பட்டிகாட்டான். மேலும் ஒரு துயர செய்தி.சென்னை வந்தவுடன் "சென்னையில் ஒரு வெண்ணை" தொடரும்.
ஒரு ஆறுதல் செய்தி.வேலை முடிந்தால் தான் சென்னை.ஆனால் வேலை முடிய(?,! $) இன்னும் இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.



பரோடா என்பது குஜராத்தில் ஒரு ஊர்.பரோட்டா என்று படித்தவர்கள் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டியவர்கள்.
அதை இப்போது வடோதரா என்று மாற்றி விட்டார்கள்.எதுக்கு தான் ஊர் பேரை மாத்துராங்கனே தெரியல.
இங்க எனக்கு என்ன வேலை?,,வழக்கம் போல போட்டி போடற வேலை தான்.




பரோடா,உங்களுக்கு நினைவில் கொண்டு வர உதவுவது "Bank of Baroda", அதை ஏன் இன்னும் "Bank of Vadodara" என்று மாத்தல?,அதை மோடி கிட்ட தான் கேக்கணும்.அது யாரு மோடி?,
குஜராத் முதல்வர்,மீடியா மன்னர்,நரேந்திர மோடி.




பரோடாவில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3.மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4.புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5.24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

எனக்கு தெரிஞ்ச ஹிந்தி வார்த்தை, "துமாரா நாம் கியா ஹேய்?",,இந்த பிட்டை,இங்க கொளுத்தி விட்டேன்.
ஆனா எனக்கே அது ரிவிட் அடிச்சிருச்சு.
"துமாரா நாம் கியா ஹேய்" னு கேட்பது மரியாதை குறைவாம்."உன் பேர் என்ன?" மாதிரியாம்.
"ஆப்கோ நாம் கியா ஹேய்"னு தான் சொல்லனுமாம்."உங்க பேர் என்ன?"

அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .

நாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன்.
வருவேன்,தொடர்வேன்..அங்க குண்டு வெடிக்காமல் இருந்தால்.

வளரும் எழுத்தாளானுக்கு  ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.

Thursday, December 9, 2010

எனது கவிதைகள்

கடந்த ஒரு வருடத்தில் நான் எழுதிய கவிதைகளின்(கவிஞர்கள் மன்னிக்க) தொகுப்பு.ஒரு பத்து கவிதைகளை மட்டும் காணவில்லை.

December – 03-2010

எனது நண்பன் ராஜேஷ் விமானத்தில் சென்றது பற்றி.

எருமை என்று அழைத்தவர் எல்லாம்
சிறுமை கொள்ள - எள்ளி நகைத்தவர் எல்லாம்
எண்ணி வியக்க,பெருமையாய் எங்கள் அண்ணன் 
விமானம் ஏறி - அவமானம் தவிர்த்து , தன்மானம் காத்தாரே.



November -20-2010 
 
 
சும்மா,, 
 
கவிதை வந்தால் தான் ,காதலும் வரும் என்கிறாய்.
நான் என்ன கண்ணதாசனா,கவிதையை கொட்ட.
கொடுமை,உன்னை புகழ வேண்டும்,அது தானே உன் எண்ணம்.
எழுதி தொலைக்கிறேன்...

 
நீ காண,ஒரு மணி நேரம் செலவு செய்து
நான் வைத்த spike யை,ஒரு நொடியில் கலைத்து விட்டேன்.

உனக்கு முன் உன் அம்மா பார்த்ததால்.

November -18-2010

வாழ்த்து மடல் - வருத்தபடா வாலிபர் சங்க புது தலைவர்- "டான்" ரவி.

சங்கத்தை காக்க வந்த எங்கள் சிங்கமே,சிறுத்தையே,
வானின்றி அமையாது உலகு-இனி
டான் இன்றி திறவாது சங்கத்தின் கதவு ,
மாரி வந்தாலும்,தலைவர் மாறி வந்தாலும்
வந்தோர்க்கெல்லாம் வாழ்வளிக்கும், எங்களின்
"
வருத்தபடா வாலிபர் சங்கமே"

November-3-2010

அண்ணன் அசோக்குமார்(ஆட்டையாம்பட்டி ) பற்றி

பொய் :

அறிவில் சிறந்தவனே,
அழகின் மன்மதனே,
அன்பின் அரசனே -அசோகனே,நீ இல்லையேல்
ஆதரவு அற்றோருக்கு ஆளில்லையே !!!
 
மெய்:

அறிவில் சிறுத்தவனே,
அழகின் மண்-மதனே,
பிணியின் பினக்கே - அசோகனே,நீ இல்லையேல்
வருத்தபடா வயோதிகர் சங்கத்திற்கு ஆளில்லையே !!!

November-3-2010
("டான்" ரவி)

ரவி எண்ணின் சூரியன் என்று பொருள்,
இவரோ - சூரிய உதயத்தை கண்ணால் காணாதவர்.

ஆறு மணி வந்தும் அண்ணன் அசரவில்லை.
ஏழு மணி ஆகியும் எழுந்திரிக்கவில்லை.

மணியோ பத்து-
எழுந்தார்,அறுசுவை உணவு உண்டார்.
எடுத்தார் பையை - ஒரு புறமாய் மாட்டிகொண்டு,
வங்கி அலுவலர் போலே - வீதியிலே வந்தார்.

தொடரும்...

November-2-2010
Written by me for my friend Pradeep(poongothai),


மேதையாக இருந்த என்னை
பேதையாய் ஆக்கியவளே
என்னவளே - என் கோதையே - பூங்கோதையே,
உன் பூவிழி பார்வையில்,
பூலோகம் மறந்தேனே.

பூ இருக்குமிடம் தான் தேனும் இருக்கும்,
அந்த தேனை தேடி தானே தேனீக்கள் திரியும் ,
பூவாக இருப்பது நீ - பூங்கோதை,
தேனியாக அலைகிறேன் நான்,
தேனாய் இருப்பது - நம் காதல்.

பிரியமுடன் பிரதீப்.


August-9-2010
(அண்ணன் ஜெயக்குமார் (எ) குட்டி )

தேடாத தெருவில்லை , கானாத கன்னி இல்லை,
ஒன்றும் ஓட்ட வில்லை, ஆயினும் நன்றே,
ஆடி வந்தது,அதிர்ஷ்டமும் வந்தது,
அண்ணி 
கிடைச்சிட்டாங்க -
அண்ணனை ஆட்டி படைக்க.

மூன்று உண்மையும் கேட்ட பின்னரும்,சொன்னாங்களாம் -
அவரை ஆக்குவேன் நன்று என்று .



June-10-2010
(About chakkaravarthy -- எல்லாம் பொய்..company farewell காக சும்மா )

இவர் பெயர் மட்டும் இனிக்கா
செயலும் இனிக்கும் - சர்க்கரை

கொண்ட நட்பிற்காக
தன் உயிரையும் தருவர் - வர்த்தி ,மெழுகுவர்த்தி

செயல் என்று வந்தால்
புயல் போல் சுழல்வார் - சக்கரம்

வரம் வேண்டுமா என்றால்
வேண்டாமே என்று சிரம் அசைப்பார் ,
ஏன் என்றால் ?
இரு கரம் அல்ல -எனக்கு முக்கரம் உண்டு என்பார்,
எப்படி என்றேன்?
இப்படி என்றார் ,
சக்-கர-வர்த்தி என்றார்.


மொத்தத்தில்,
அல்லல் படும் அடியவர்க்கு அள்ளி தரும்
அரசர் இவர் - சக்கரவர்த்தி 

 
June-04-2010
(about Tharik)

தாரிக்கை நோக்கி...

பால் குடிக்கும் பாலகனா நீ?
இல்லை,கள் குடிக்கும் கள்ளன் நீ.

உண்மை பேசும் உத்தமனா நீ?
உண்மையையே பேசாத ஊர்சுற்றி நீ.

உலகம் அறியா அப்பாவியா நீ?
இல்லை,பல ....


June-04-2010
(About Chakkaravarthy,எல்லாம் பொய்..company farewell காக சும்மா )

மலர்களில் சிறந்ததாம் மல்லிகை,
குல தொழிலோ மளிகை ,
மனமோ வசந்த மாளிகை.

முல்லைக்கு தேர் தந்த பாரி,
உன்னாலே,வானம் பொழியுது மும்மாரி.



June-1-2010 (about me)

Openbravo என்ற ஒரு சொல்லை வைத்து,
பிழைப்பை ஓட்டுபவனே..

ஒன்றும் அறியாமல் இருந்தும்,ஊரை ஏமாற்றும்
ஒப்புக்கு சப்பாணியே !! !

ஈராண்டுகள் ஆன பின்னும்,ERP அறியாமல்
இளித்து கொண்டிருக்கும் இளிச்சவாயனே !!!

இனியாவது விளையாட்டை விட்டு வேலையை பார்,

இனியும் இளித்து கொண்டிருந்தால் , ஈராண்டுகள் அல்ல,
ஈரேழு ஆண்டுகள் ஆனாலும் உனக்கு ERP விளங்காது.

இப்படிக்கு உன் மனசாட்சி.


June-01-2010
(love)

உன் ரத்த நிற இதழ் தனில் - என் இதயம் இழந்தேன்,
உன் பசுமை நிற தலை தனில் - என் பசியை மறந்தேன்,
உன் உடலமைவு தனில் - ஒரு புது உலகம் கண்டேன்,
ஆனால்,
உன் கூர் முள் குத்தியதில்,என் பொறுமையை இழந்தேன்- ரோஜா செடியே




வாழ்க்கை வாழ,

சிரித்து விடு அல்லது சிந்தித்து விடு,
பேசி விடு அல்லது பேச விடு,
போராடி விடு அல்லது ஓடி விடு,
சுருக்கமாய் சொல்கிறேன் -
வாள் பிடி அல்லது வாலை பிடி.

May-28-2010

உன்னை காணவே காலை வந்தேன்,ஆனால் நீ வரவில்லை.
மாலை வரை காத்து கிடக்கிறேன் , ம் , நீ வரவில்லை.
தேடினேன்,மாற்றினேன்,மன்றாடினேன் ,நீ மட்டும் வரவேயில்லை,
நீ வராதது குறித்து வருந்தவில்லை,ஆனால் அவன் பார்த்தவுடன் வந்துவிட்டாயே,
ஏன் ,
என் மேல் குற்றமோ? அல்லது நான் கொண்ட code ன் குற்றமோ?
என் அன்பு output யே ..

May-13-2010
About Manavalan

மண்ணை ஆழ பிறந்த மன்னனே,
மாதர் தம் மனதை கொள்ளை கொண்ட மன்மதனே ,
மனை ஆழ போகும் எங்கள் மண்ணின் மைந்தனே,
மணவாள மாமுனியே ! உன் மனை வாழிய ,வாழியவே !

About Manu marriage
மாந்தர் வந்தனர், 
மகளிர் வந்தனர், 
மணமாலை வந்தது, 
கூடவே மழையும் வந்தது. 

காலை போனது மாலை வந்தது, 
மழை விட்ட பாடில்லை. 

மழை சொன்னது,மணாளனை வாழ்த்த வந்தேன் என்று, 
(திரு) மலை சொல்கிறேன்,இன்று முதல் இவர் வாழ்வில் புயல் வீசும் என்று.

About Eswar-by lover Marakatham
என்னை கொள்ளை கொண்டதே,
என்னவரின் சிரத்தின் ஒளிவட்டம்.
ஈஸ்வரனை நாடியே - ஈசனை வேண்டினேன்,
மரகதகல் வேண்டாமே ,என் நாதனின் மாங்கல்யம் போதுமே.

About my lover:

உன் கொலுசு ஓசை கேட்க கோடி காதுகள் வேண்டுமடி,
உன் வளையல் ஓசை கேட்டுகொண்டிருக்க வயது நூறு வேண்டுமடி,
ஆனால் காதல் கடிதம் தந்தவனுக்கு கன்னத்தில் ஒன்று தந்தாயே -அதில் இருந்து,
எவ் ஓசையும் கேட்கவில்லையம்மா ,உன் செருப்போசை தவிர்த்து...

love failure;

வாழ்வே மாயம் என்ற வகையில்,
சாவே மேல் என்ற நிலையில்,
துன்பமும் ,துயரமுமாய் துவண்டு விட்ட வேலையில்,
உன்னை சந்தித்தேன்.
உன்னை அனைத்ததினால்,இவை அனைத்தையும் மறந்து விட்டேன்,
என் அன்பு மதுவே.


May-12,,
Love

கவிதை எழுத சொன்னாய்,கவிதைகளோடு வந்தேன்.
கடிதம் எழுத சொன்னாய்,கடிதங்களோடு வந்தேன்.
கரம் பிடிப்போமா என்றாய்,இரு கரம் பிடிப்போம் என்றேன்.
மறந்து விடு என்றாய்,மருந்து விட்டேன்-உலகை மறந்து விட்டேன்.
நன்றி - டாஸ்மாக் .


Sincere love:


நானும் காதலித்தேன்,
பூச்செடியையும் ,
பூனையையும் ,
புறாவையும்,
இந்த மூன்றை வளர்க்கும் பூங்கொடியையும் அவள் தங்கச்சியையும்.

My lover::

அவள் கண் இமைகள் இன்று கார்மேகமாய் தெரிகின்றன,
அவள் கன்னங்கள் இன்று கனியாக தெரிகின்றன,
அவள் அழகில்லை ,,ஆனால் அழகாய் தெரிகிறாள்,
எப்படி?
அவளை அழகாக்கினேன், போட்டோஷாப்(Photoshop CS5) ன் உதவியுடன்.


Jan-2
(குடிமகன்)

தண்ணி இல்லாமல் தண்ணி அடிப்பவனே,
full
யை full யாக அடிப்பவனே,
மூன்று வேளையிலும் முதன் வேலையாய் சரக்கை போடுபவனே,
தங்கத்தை(GOLDEN GRAPE) அங்கமாய் கொண்டவனே,
பகலில் உன் முன் monitor ,
இரவிலோ உன்னுள் monitor .
 


Saturday, October 30, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -spike இல்ல bike-தொடர்ச்சி (3)

என்னை பார்த்த வினோத் கண்ணன் அதிர்ச்சி அடைந்தான்.

"டேய், என்னடா spike யை எடுத்திட்ட? ஏன்டா? " என்றான் கண்ணன்.
"என்னால முடியல,,அந்த முள் முடி ரெண்டு நாள் நேரா நின்னுச்சு,அப்புறம் கோணல்,மாணல் ஆயிடிச்சு..
அதான் அந்த கிரீம் எல்லாம் போட்டும் கூட ,ரெண்டு மணி நேரம் மேல  நிக்க மாட்டேன்கிறது.பாவம்டா பசங்க,இதை வச்சி எப்படித்தான் பொழப்ப ஒட்டுறாங்களோ,,அப்பா..
வேற ஐடியா சொல்லுடா " என்றேன்.
"இருக்கு,கவலைபடாதே "என்றான்.

என்ன ஐடியா?

spike இல்ல bike

"பைக் இருக்கா?"என்றான்
"இருக்கே."
"என்ன பைக்?"
"டிவிஎஸ் ஸ்டார்"
"ஸ்டார் சிட்டி னா ஒகே,ட்ரை பண்ணலாம்"
"மச்சான்,ஸ்டார் சிட்டி இல்ல,,வெறும் ஸ்டார்,,புல்லெட் வண்டி மாதிரி இருக்குமே அது,,ஓகே வா? "
"வெளங்கிடும்,,டேய் ,யூத் ஓட்ற வண்டியாடா அது? "
"ஏன்?அதுக்கென்ன குறைச்சல்,நல்லா தானே இருக்கு."என்றேன்.
"வெங்காயம்,,அவன்,அவன் pulsar ,apache ,yamaha ,,னு சுத்தறான்,நீ சுத்த வேஸ்ட், "
"ஏன்?அந்த பைக்ல எல்லாம்  அப்படி என்னதான் ஸ்பெஷல்?"
"இருக்கே,அந்த பைக்ல back seat எல்லாம் எப்படி இருக்கும்னு பாத்து இருக்கிறியா?பழனி படிக்கட்டு மாதிரி நெத்து குத்தலா இருக்கும்,யாராவது பின்னாடி உட்காந்தா,முன்னாடி இருக்கிறவன் மேல முழுசா சாஞ்சு விழுவாங்க,,இது போதாதா?,,அப்புறம் போதா குறைக்கு,ரோடு குழி,டிராபிக் னு பல வசதிகள் வேற நம்ம சென்னைல..நீயும்,வண்டி வச்சிருக்கிற பாரு,பை பாஸ் ரோடு மாதிரி."
"ஒண்ணும் புரியலையே"என்றேன்.

ஆராய்ச்சியின் விளக்க படங்கள்








கொஞ்சம் யோசித்து பார்த்தேன்,உண்மை விளங்கியது.