Friday, January 22, 2010

ஆசிரியர் - சிறுகதை

ஆசிரியர் - சிறுகதை – குட்டி


பல நாட்கள் கழித்து தான் படித்த கல்லூரியிலேயே புரபசர் பதவியில் கல்லூரிக்குள் நுழைந்த சந்தோசத்தில் கல்லூரியை அந்த மாலை நேரத்தில் சுற்றி பார்க்க கிளம்பினான் ராஜா.ஆனால் எதோ நெருடல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. மாணவனாய் இவனையும் இவனது நண்பர்கள் பற்றியும் மொத்த கல்லூரியும் அறிந்த விசயம், ஒரே வார்த்தையில் சொன்னால் முரடர்கள்.
அந்நாள் ஒரு மாலை தன்னுடய நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் நிற்கையில் அவ்வழியே சென்ற அவனது ஆசிரியர் அவர்களை பார்த்து பேசிய வார்த்தைகள் "இந்த கல்லூரிய சுத்துன கழுத எங்கயும் போகாதாம்- போய் பொழைக்கற வழிய பாருங்கடா".பேசிய வார்த்தைகள் பொறுக்காமல் அவரை பழி தீர்க்க அன்றிரவே அவரது விடுதி அறையில் தீ வைத்து விட்டு, அவரை அடுத்த நாள் அதே இடத்தில் கேலி செய்தது ஞாபகம் வந்தது. “மன்னிப்பு என்பதே கிடையாது வாத்தி” எனக்கூற அவரோ கூனி குறுகி போனார். சொல்ல முடியாத வேதனையில் அவர் தவித்ததை பார்த்து பார்த்து ரசித்தவர்கள் இவர்கள். ஆனால் இன்றோ அதே கல்லூரியின் புரபசராக புன்முறுவலோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் அந்த பழைய மாணவனும்.

சூரிய உதயத்தை பார்த்து பல வருடங்கள் கடந்திருந்தது. வாழ்க்கையின் கட்டாயம் செய்த கோலம், அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு இன்றே தயாராக வேண்டி இருந்தது அதிகாலையில். ஆசிரியர்களின் வகுப்புகளை புறகணிப்பதும், கிண்டல் செய்வதும், வகுப்புகளை பாதியில் நிறுத்துவதும் பொழுதுபோக்காய் இருந்த அவனுக்கு தற்போதய இடம், பொருள், ஏவல் எல்லாம் உறுத்தியது. எப்படி வாழ்ந்தவன் நான் இந்த கல்லூரியில் ராஜாவாய், மந்திரியாய், பெண்களின் கதாநாயகனாய். ஆனால் ஏதோ உறுத்தியது கண்டு பிடிக்க முயற்சித்தும் முடியாமல்.
அன்று அவன் நடத்த வேண்டிய பாடம் "வாழ்க்கையில் முன்னேற கடைபிடிக்க வேண்டிய விசயங்கள்"என்ற தலைப்பில். நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என துவங்கி பொரியவர்களை எந்த அளவு மாரியாதையுடன் நடத்த வெண்டும் என்பது வரை அரை மணி நேரம் பேச, வழக்கமான மாணவர்கள் வழக்கம் போல் பேசி கொண்டும், சிரித்து கொண்டும், ஆசிரியரை கிண்டல் செய்வதுமாய் இறுக்க. கோபம் கொப்பளிக்க, உதடுகள் முனக முயற்சிக்க கட்டுப்படுத்தியவனாய் தனது அழைப்பு துண்ட்டிக்கபட்ட செல்பேசியுடன் மன்னிப்பு கேட்டு வகுப்பின் வெளியே சென்றான். தனது உறுத்தலுக்கு பதில் கண்டவனாய் வகுப்பறைக்குள் ஒரு தெளிர்ச்சியுடன் நுழைந்தான். ஞான ஒளி பெற்றவனாய் அடுத்த ஐந்து நிமிடங்கள் பேசிய விசயம் " வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நாளை வரும் பிரச்சனைகளை இன்றே அறிய வேண்டும்,அதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் பதில் கூறும் முன்னும் அவர்களுக்கு கட்டளைகள் இடும் முன்னும் அவர்களது ஸ்தானத்தில்(இடத்தில்) இருந்து யோசித்து செயல்பட வேண்டும்"என உணர்ந்தவனாய் பேசி வகுப்பை முடித்துக்கொண்டான்.
பலவருடங்கள் படித்த கல்லூரி பாடம் தராத அறிவை அவனுக்கு வழ்க்கை பாடம் தந்திருந்தது. வகுப்பு முடிந்து கிளம்பும்போது ஒரு சந்தோசம் வந்திருந்தது. நேரமே கல்லூரியில் இருந்து கிளம்பினான் அவனது ஆசிரியரை பார்த்து மன்னிப்பு கேட்பதற்காகவும், பல வருட மன உறுத்தலை மறப்பதற்காகவும்.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.