2007
எப்படியோ இந்த M 3 (maths - 3 ) பேப்பரை பாஸ் பண்ணிட்டேன்..maths - 3 இல் "arrear" (பெயில் ) இல்லாமல் பாஸ் பண்ண,போன ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் அல்லது ஒழுங்காய் படித்து இருக்கு வேண்டும் .இனிமேல் நானும் வளாக தேர்வுக்கு போலாம்.முக்கியமாய் வகுப்புக்கு கட் அடிக்கலாம்.
இப்ப எல்லாம் டீ கடைல டீ போடுறதுக்கு கூட இன்ஜீனியர் படிப்பை ஒரு பொருட்டா மதிக்கறதே இல்லை. கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பதிலா,பாஸ் ஆனவங்க எல்லாம் இன்ஜீனியர் படிக்கலாம்னு மாத்தியதின் விளைவு,கணக்கில் அடங்கா இன்ஜீனியர்கள். நானே ஒரு இன்ஜீனியர்.இதில் இருந்தே,இக்கால இன்ஜீனியர்களின் தரத்தை நீங்கள் உணரலாம். இந்த கணக்கில் அடங்கா அனைவரையும் "personal interview" வைப்பது என்பது இயலாத காரியம்.அதனால் தரம் குறைந்த இன்ஜீனியர்களை களை எடுக்கும் வழிகள் தான் பல கட்டங்கள் ,மாணவர்களை பொறுத்தவரை பல கண்டங்கள்.
இதோ வந்துருச்சு முதல் வளாக தேர்வு
"Placement coordinator " (இவர் தான் இந்த தேர்வுகளை எல்லாம் ஏற்பாடு பண்றவர்,கண்காணிக்கறவர்) அறிவிக்கறார் ,இந்த வளாக தேர்வில் கலந்து கொள்ள தகுதிகள்,
1 ."no standing arrears "( தற்பொழுது எல்லா பாடத்திலும் பாஸ் பண்ணி இருக்கணும்,எத்தனை முறை எழுதினோம் என்பது கணக்கில் வராது..இன்னொன்னு இருக்கு "no history of arrears ",வரலாறில் பெயிலே ஆகி இருக்க கூடாது...சீ சீ இந்த பழம் புளிக்கும் )
2 . பத்தாவது மற்றும் பனிரெண்டாவதில் 60 % மேல் மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்..(பத்தாவதுல ஊர சுத்திட்டு 290 (58 %) மார்க் வாங்கிருந்தா காலி தான்.நல்ல வேலை நான் அப்படி பண்ணுல..பனிரெண்டாவதில பண்ணுனேன்,ஆனா 75 % தண்டி தப்புச்சிடேன்)
முதல் வெற்றி,நான் இந்த தேர்விற்கு செல்ல தகுதி பெற்று விட்டேன்..ஹையா ஜாலி..ஆனா இதுக்கு இது எல்லாம் வேணுமாம்.."formal shirt -பண்ட" (காலர் வச்சது,பூ-பொம்மை போடாதது,முழு கை),"shoe ,shocks".(நம்ம பசங்க பல பேரு "shoe " மட்டும் தான் போடுவாங்க),,பெல்ட்(பக்கில்சுல பந்தா இல்லாமல்,கோடு போடாமல்),,டை(அதை கட்டுவது தான் கொடுமை),,எல்லாத்தையும் விட கொடுமை "resume (எ) curriculum vitae ",(உங்களின் படிப்பு ஜாதகம்),அப்புறம் சிரிச்ச மாதிரி நாலு போட்டோ..
சரி விடு,,அடுத்த "interview " ல பாத்துக்கலாம் னு இத "deal " ல விட முடிவு பண்ணினோம்(நல்லதுக்கும்,கேட்டதுக்கும் நாலு பேரு இருப்பாங்க இல்ல?).
இது ஒரு வெளி வளாக தேர்வு(அதாவது வேற ஒரு காலேஜ் ல நடக்கும்,நாம போய் கலந்துக்கணும்)..இது தான் மகிழ்ச்சியான செய்தியே..உள் வளாக தேர்வுனா,நம்மளை கட் அடிக்க விட மாட்டாங்க..ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை "attendance" போட சொல்லுவாங்க.
வெற்றிகரமாய் முதல் கட்டம்,aptitude test ,,நாலு விடை இருக்கும் ,,நமக்கு பிடிச்சதை எடுத்துக்கலாம்..ஆனா இதிலும் சில ஏழரை இருக்கு.தப்பான பதிலுக்கு மார்க்கை குறைக்கிறது(negative marks ) ..அப்படினா எனக்கு முட்டை மார்க்குக்கு கம்மியா தான் வருமே?,,எப்படியோ முட்டை கிடையாது.
முதல் பக்கத்தில் நிரப்ப சொல்லி பல கட்டங்கள் இருந்துச்சு.எல்லாத்தையும் நிரப்பிட்டு பார்த்தா,புகைப்படம் ஒட்ட சொல்லி இருந்துச்சு..நாலு போட்டோ நாப்பது ரூபாய்க்கு எடுத்து,இதுக்கு எதுக்கு வேஸ்ட் பண்ணிட்டுனு ஒட்டவே இல்லை.படிப்பு ஜாதகம்(cv) வேற இல்லை ..கடைசியாய் புகைப்படம் ஓட்டாதவர்கள் விடைகள் திருத்தப்படாது என்றார் தேர்வு கண்காணிப்பாளர்.. அது ஒழுங்கா எழுதுனவனுக்கு,எனக்கு இல்ல.
வெளியில் வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது,போட்டோவ கலர் செராக்ஸ் எடுத்து கட் செய்து தர கடை இருக்குதாம்.நாப்பது ரூபாய்க்கு - இருவது போட்டோ வருமாம்.ச்சே,இது தெரிஞ்சு இருந்த நம்ம அதிர்ஷ்டம் என்னனு பார்த்து இருக்கலாம்..ஒரு நல்ல விஷயம் என்னன்னா,முதல் கட்டத்தில் தேர்வு பெற்றவர்கள் பெயர்கள் மட்டும் தான் சொல்லுவார்கள்.யாருடைய மதிப்பெண்ணும் சொல்ல மாட்டார்கள்.தப்பிச்சேன்டா சாமி..வெளி ஊர்ல எனக்கு ஏற்பட வேண்டிய ஒரு பெருத்த அவமானம் தவிர்க்கப்பட்டது. எப்படியோ இந்த முறை படிப்பு ஜாதகம்(cv)ரெடி பண்ணிட்டேன்..தப்பு,தப்பு "copy " பண்ணிட்டேன்..அடுத்த தேர்வுல ஒரு கை பார்த்துடலாம்..
தொடரும்..

எக்சாம் எழுதுன எஃப்ஃபக்ட்..
ReplyDeleteM3 pathi sonnathu unmai sir.. enga setla PQT nu oru papper la nalla aapu vechanga...
ReplyDeletehttps://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US&pli=1
ReplyDeletetoday, i have made some important modifications in adding a label feed in google reader ....see it....d...